உடுமலை சங்கர் கொலை வழக்கு: தமிழக அரசின் மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதி மன்றம்..!!
உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், அனிருத்த போஸ் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பிரிவு, வழக்கை பரிசீலிக்க வேண்டும் என்றார்.
2016 ஆம் ஆண்டு உடுமலைபேட்டை சங்கர் ஆணவ கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புக் கொண்டது.
இந்த வழக்கில் தமிழக அரசையும் ஒரு கட்சிக்கரராக இணைக்க, கட்சிக்காரர்கள் வரிசையில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
மாநில அரசு சார்பில் ஆஜரான வக்கீல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெளிநாடு செல்வதைத் தடுக்க உயர் நீதிமன்றத்திடம் உத்தரவு கோரினார். இருப்பினும், இதுபோன்ற எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கும் எண்ணம் இல்லை என்று நீதிமன்ற பிரிவு கூறியது.
சங்கர் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 11 பேரில் 6 பேருக்கு, திருப்பூர் அமர்வு நீதிம்ன்றம் மரண தண்டனை வழங்கியது. மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு வருட காலத்திற்கு பிறகு, இதை எதிர்த்து போடப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மரண தண்டனையை ரத்து செய்து பெண்ணின் தந்தை பி. சின்னசாமியை விடுதலை செய்தது.
குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஐந்து பேரின் மரண தண்டனையையும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மாற்றியது. விசாரணை நீதிமன்றம் 2017 டிசம்பரில் பெண்ணின் தாய் அன்னலட்சுமி மற்றும் மாமா பாண்டிதுறை ஆகியோரையும் விடுவித்தது.
ALSO READ | TN COVID-19 நிலவரம்: இன்று 5,783 பேருக்கு தொற்று; 4 லட்சத்திற்கும் அதிகமானோர் குணம்
2015-ம் ஆண்டில் சேர்ந்த சங்கரும், கவுசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பிரச்சனை வெடித்தது. இதை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டில்,
உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே, கவுசல்யா மற்றும் சங்கர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சங்கர் உயிரிழந்தார். படுகாயங்களுடன் கவுசல்யா தப்பினார்.
ALSO READ | இன்றைய வானிலை முன்னறிவிப்பு: 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!