டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'டிக் டாக்' செயலிக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், டிக் டாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரிக்குமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


இது தொடர்பான வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவை ஏற்று, சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து, கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து, டிக் டாக் செயலி நீக்கப்பட்டது. ஆனால் டிக் டாக் செயலியை அறிமுகப்படுத்திய சீன நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றமே விசாரித்து, நாளை மறுநாள் முடிவெடுக்க வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளது.



அன்றைய தினம் சென்னை உயர்நீதிமன்றம், டிக் டாக் செயலி தொடர்பான எந்த முடிவையும் எடுக்காவிட்டால், அச்செயலிக்கான தடை தானாகவே விலகியதாக கருதலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மீண்டும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. டிக்-டாக் செயலி மீதான தடை குறித்து வரும் 24ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும்; தவறும் பட்சத்தில் தடை தளர்ந்ததாக கருதப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.