சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது... OPS உள்பட 11 MLA-க்கள் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
தகுதிநீக்கம் செய்யப்பட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி, இந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
புது டெல்லி: 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் வழக்கை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், தகுதிநீக்கம் செய்யப்பட 11 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது. எனவே அவர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கையில், இந்த வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கடந்த பிப்ரவரி 18, 2017 அன்று தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ். உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி டி.டி.வி. தினகரன் மற்றும் திமுக கொறடா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரப்பட்டது.
சூடுபிடித்த ஓபிஎஸ் & 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு பல முறை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், கிட்டத்தட்ட சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, ஓ.பி.எஸ். உள்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கை உச்ச நீதிமன்றம் முடிந்து வைத்துள்ளது.
எத்தனை ஸ்டாலின், தினகரன் வந்தாலும் ADMK-வை கலைக்க முடியாது: ஜெயக்குமார்
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.