பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ச்சி மழை பெய்ததையடுத்து அணையின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.


இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் மழை பெய்ததால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 463 அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 1,988 அடியாக அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 2,200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.