T23 புலிக்கு உடல்நலக் குறைவு; தொடர்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள்
புலி நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று 4 நபர்களை தாக்கி கொன்றது. புலியின் இந்த கொடூர தாக்குதல்களால் அஞ்சிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
புலி நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினக்குடி, சிங்காரா வனப்பகுதியில் புலி ஒன்று 4 நபர்களை தாக்கி கொன்றது. புலியின் இந்த கொடூர தாக்குதல்களால் அஞ்சிய பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
அந்த ஊர் மக்களின் இடைவிடாத போராட்டத்தின் காரணமாகவும், நீதிமன்றம் தலையீட்டாலும் அந்த புலியை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் கடந்த சில தினங்களாக தீவிரமாக ஈடுபட்டனர். இதை அடுத்து, நேற்று மசினக்குடி அருகே சுற்றித்திரிந்த T23 புலி வனத்துறை அதிகாரிகளிடம் பிடிப்பட்டது. கடந்த 22 நாட்களாக தேடப்பட்டு வந்த இந்த ஆட்கொல்லி புலியை இன்று பிடிபட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேடுதலில் இருந்து பதுங்கியதால் 20 நாட்களாக சரியாக உணவு எடுத்துக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. அதன் காரணமாக புலி சோர்வாக இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது மைரூரு வனவிலங்கு மீட்பு மையத்தில் புலி வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவர்கள் புலிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ALSO READ | T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் வீடியோ!
முன்னதாக புலியை சுட்டுக்கொன்று விடுங்கள் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய விதிகளின்படி புலியைக் கொலை செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது வீதிக்கு புறம்பான செயல் எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்காகி விசாரித்த நீதிமன்றம், புலியை சுட்டுக்கொல்ல வேண்டாம் எனவும், மயக்க ஊசி செலுத்தி உயிரோடு பிடிக்குமாறும் வனத்துறை அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.
ALSO READ | மயக்க ஊசிக்கும் மயங்காத புலி! தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR