T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் வீடியோ!

உதகையில் T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் விடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 9, 2021, 06:36 PM IST
T-23 ஆட்கொல்லி புலியின் அச்சுறுத்தும் வீடியோ! title=

T-23 புலி பதுங்கியுள்ள இடத்தை சுற்றி கூடுதலாக 20 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன.  மசினகுடி அருகே வனப்பகுதியில் சுற்றி திரிந்து வரும் T-23 புலியை உயிருடன் புடிக்க மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியை கடந்த 14 நாட்களாக தொடர்ந்து வனத்துறையினரால் நடைபெற்று வருகிறது.   புலி பதுங்கியுள்ள இடத்தினை சுற்றி கூடுதலாக 20 கண்காணிப்பு கேமிராக்கள் வைக்கப்பட்டுடது.

50க்கு மேற்ப்பட்ட வனத்துறையினர் மற்றும்  4 வனகால்நடை மருத்துவகுழு மசினகுடி வனப்பகுதியில் T23 புலியை தேடி புடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்களாக சிங்காரா வனப்பகுதியில் உள்ள மூங்கில் புதர் பகுதியில் பதுங்கி இருந்த புலியை புடிக்க நேற்று வனத்துறையினர் அந்தபகுதியில் தீவிரமாக தேடி வந்தனர்.

மசினகுடியை சுற்றியுள்ள பகுதிகளில் வனத்துறை சார்பில் வைக்கப்பட்ட கேமராக்களிலும் T23 புலி தொடர்பாக எந்த தகவலும் இல்லை என, தமிழக முதன்மை வன உயிரின பாதுகாவலர் தெரிவித்திருந்தார். சிங்காரா பகுதியில் உள்ள சில இடங்களில் T23 புலியின் காலடி தடங்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது எனவும் அந்த இடத்திற்கு குழுவினர் விரைந்துள்ளனர் என்று தெரிவிக்கபட்டது.   இந்நிலையில் கடந்த செப். 29ஆம் தேதி Mayfield தேயிலை தோட்டத்தில் எடுக்கப்பட்ட விடியோ காட்சி தற்போது வைரல் ஆகி வருகிறது.  அதில் புலி ஒருபுறம் இருந்து மறுபுறம் காட்டிற்க்குள் தப்பி ஓடுகிறது.  இந்த வீடியோவில் புலி மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுகிறது.

 

 

ALSO READ தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News