சென்னை: கொரோனா வைரஸ் சோதனையில் மேலும் 75 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் 74 பேர் டெல்லியில் உள்ள தப்லிகி ஜமாஅத்தில் கலந்து கொண்டவர்கள். தப்லிகி நிகழ்வில் கலந்து கொண்ட 264 பேர் உட்பட மாநிலத்தில் மொத்த நேர்மறையான வழக்குகள் இப்போது 309 ஆக உயர்ந்துள்ளன என்று தமிழக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றும் மட்டும், இதுவரை கேரளாவில் 21 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகி உள்ளன. அதுவும் காசராகோடு (Kasaragod) பகுதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 8 வழக்குகள் வெளிவந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 21 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் கேரளாவில் பதிவாகியுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.


தமிழக முதல்வர் அறிவித்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.


கோவிட் -19 தொற்று எதிராக பிரதமர் மோடி எடுத்து வரும் அனைத்து முயற்சிகள் உள்நாட்டு மற்றும் உலக அளவில் பாராட்டப்பட்டு வருகின்றனர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.