தாம்பரம் அடுத்த இரும்பூலியூர் பகுதியில் வசித்து வருபவர் சந்துரு. இவர் கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் கார்கள் விற்பனை செய்வதில் பல்வேறு நபர்களிடம் பல லட்சம் ரூபாய் பணம் ஏமாற்றியதாக பல்வேறு வழக்குகள் இவர் மீதும் நிலுவையில் உள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்ட சந்துரு புழல் சிறையில் இருந்தபோது தாம்பரம் இரும்பலியூர் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி உதயா, ரவுடி விவேக் ஆகியோரிடம்  சிறையில் நட்பு ஏற்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது சந்துரு தான் கார் விற்பனையில் பல்வேறு நபர்களை ஏமாற்றி பல லட்சம் ரூபாய் சுருட்டி விட்டதாக ரவுடி உதயாவிடம் கூறி உள்ளார். இந்த நிலையில் சிறையிலிருந்து அண்மையில் இருவரும் வெளியே வந்துள்ளனர். இருவரும் இரும்பூலியூர் பகுதியில் வசித்தும் வந்துள்ளனர். இரும்புலியூர் உதயா மீது கொலை, கொள்ளை வழக்குகள் ஆள் கடத்தல் கட்டப் பஞ்சாயத்து என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அண்மையில் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே லோகேஷ் என்பவரை குண்டு வீசியும் கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த வழக்கில் இரும்பூலியூர் உதயா தொடர்புடையதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.



மேலும் படிக்க | உதயநிதி அடித்த கிண்டலில் கடுப்பான சர்ச்சை சாமியாரின் ரியாக்ஷன்


இந்த நிலையில் கார் விற்கும் தொழில் செய்துவரும் சந்துருவை கடத்தி பல லட்சம் ரூபாய் பறிக்கலாம் என முடிவு செய்தனர் பிரபல ரவுடி இரும்பூலியூர் உதயாவும் அவனது கூட்டாளிகளும். சந்துருவை கடத்துவதற்கு தனது சக கூட்டாளிகளான சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என அனைத்து காவல் நிலையத்திலும் வழக்கு நிலுவையில் உள்ள கடப்பேரி உதயா, இரும்பூலியூர் சூரியா, சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார், பிளிக்ஸ் கிளைமண்ட், அபிலாஷ் ஆகியோருடன் சந்துருவை கடத்துவதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.



திட்டம் தீட்டியது போல் இரும்புலியூர் உதயா கார் விற்பனை செய்யும் சந்துருவை வா நண்பா வெளியே சென்று வரலாம் என கூறி காரில் சந்துருவை ஏற்றுக் கொண்டு இரும்பூலியூர் பகுதியில் இருந்து தாம்பரம் நோக்கி காரில் வந்துள்ளார். அப்பொழுது சக கூட்டாளிகளையும் காரில் ஏற்றிக் கொண்டு தாம்பரம் முடிச்சூர் சாலையில் கார் வேகமாக சென்றுள்ளது. அப்பொழுது திடீரென காரில் இருந்த ரவுடிகள் சந்துருவை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. ரவுடிகள் தாக்கியதில் சந்துருவின் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியதாக கூறப்படுகிறது


இந்நிலையில் உதயாவும் அவனது கூட்டாளிகளும் சந்துருவிடம் மேலும் 2 லட்சம் உடனே தன்னுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்துமாறு கொடுமைபடுத்தி உள்ளனர். வழி தாங்க முடியாத சந்துரு உடனடியாக ரவுடியின் ஒருவரின் அக்கவுண்டுக்கு ஆன்லைன் மூலம் ஐம்பதாயிரம் ரூபாயை chandru Google pay மூலமாக  வழங்கியுள்ளார். பணம் வழங்கியதும் சந்துருவை வீட்டில் இறக்கிய ரவுடிகள் தப்பி சென்றுள்ளனர்.


இதனைப் பார்த்த சந்துருவின் அம்மா மகனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையிவ் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். மேலும் இது சம்பந்தமாக தாம்பரம் காவல் நிலையத்தில் சந்துருவின் அம்மா புகார் அளித்துள்ளார். இதனையடுத்து புகாரை பெற்றுக் கொண்ட தாம்பரம் காவல் ஆய்வாளர் சார்லஸ் உடனடியாக தாம்பரம் கமிஷனர் அமுல்ராஜ் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக தாம்பரம் துணை ஆணையாளர் பவண்குமார் ரெட்டி தலைமையில் போலீசார் சந்துருவை கடத்திய பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 6 நபர்களை தனிப்படை அமைத்து தேட ஆரம்பித்தனர்.



இந்த நிலையில் போலீசார் தேடி வருவதை அறிந்த பிரபல ரவுடி அபிலாஷ் தாம்பரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். சரண் அடைந்த அபிலாஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது தாம்பரம் சுரங்கப்பாதை அருகே கூட்டாளிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக காவல் ஆய்வாளர் சார்லஸ் தலைமையில் போலீசார் அவர்களை பிடிக்க சென்றபோது, போலீஸரைப் பார்த்த ரவுடிகள் மூன்று நபர்கள் தாம்பரம் இரயில்வே தண்டவாளத்தில் ஓடி உள்ளனர்.


போலீஸ் தங்களை நெருங்குவதை கண்டு பயந்த ஓடிய ரவுடிகள் திடிரென, ரயில்வே தண்டவாளத்தில் மூன்று ரவுடிகள் விழுந்துள்ளனர். தண்டவாளத்தில் விழுந்ததில் கடப்பேரி உதயா, சந்தோஷ் குமார் பிளிக்ஸ் ‌மூன்று ரவுடிகளின் வலது கைகள் உடைந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர். வலியில் துடித்த பிரபல ரவுடிகளை போலீசார் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பிறகு தாம்பரம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியது. 


விசாரணையில் இவர்கள் அனைவருமே இரும்பலியூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி விவேக் கூட்டாளி என தெரியவந்தது. இவர்கள் புறநகர் பகுதிகளில் ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து கொலை கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் நிலையில் உள்ளது. பல்வேறு காவல் நிலையத்தில் அனைவரின் பெயரில் வழக்குகள் இருப்பதாகவும், அனைவரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என போலீசார் தெரிவித்தனர். மேலும், தலைமறைவாக உள்ள முக்கிய பிரபல ரவுடி இரும்பூலியூர் உதயா, இரும்பூலியூர் சூரியா இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். 


மேலும் படிக்க | ஆளுநரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் 49 சிறைவாசிகளின் விடுதலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ