தாம்பரம்: ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: கைதான 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த ஆறாம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து அதனை கொண்டு வந்த சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன்க்கு சொந்தமான ஓட்டலில் இருந்து பணம் கொண்டு வருவதாகவும் இது தேர்தல் செலவுக்காக கொண்டு செல்லப்படுவதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
மேலும் படிக்க | ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவுக்கு இ-பாஸ் கட்டாயம்!
மேலும் இதில் பல்வேறு நபர்களுக்கு தொடர்பு உள்ளது எனவும் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து பணம் கைமாற்றிக் கொண்டு செல்வதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்ததன் அடிப்படையில் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் பாஜக நிர்வாகி கோவர்தன்க்கு சொந்தமான இடங்கள், வீடுகள், ஓட்டல்களில் தாம்பரம் காவல் துறையினர் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளை இணைந்து சோதனை நடத்தி பணம் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியினர்.
மேலும் இதில் பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி தாம்பரம் போலீசார் விசாரணை செய்து வாக்குமூலங்களை வீடியோ பதிவு செய்து வைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை மாற்றி டிஜிபி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் நேற்று இந்த வழக்கு தொடர்பாக ஆவணங்களை பெற்ற பின்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் பணம் கொண்டு சென்று சிக்கிய மூன்று பேர் மீதும் நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மேலும் தாம்பரம் ரயில் நிலையம், சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள நயினார் நாகேந்திரன்க்கு சொந்தமான ஓட்டல், அவரது உறவினரான முருகன் இல்லம் ஆகிய இடங்களுக்கு சென்று சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் பணம் கொண்டு சென்று சிக்கிய மூவரில் நவீன் மற்றும் பெருமாள் ஆகிய இருவருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இன்று சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் இருவரும் விசாரணைக்கு ஆதரவாகி விளக்கம் அளிக்க வேண்டுமென அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அவர்களிடம் இந்த பணம் யாருடையது எங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து தீவிர விசாரணை செய்து அவர்கள் அளிக்கும் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ள அடிப்படையில் நயினார் நாகேந்திரன் உறவினர் முருகனையும் அழைத்து விசாரணை செய்த பிறகு திருநெல்வேலி நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும் நேரில் அழைத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீஸ் திட்டமிட்டுள்ளதாக கூறபாடுகிறது.
மேலும் படிக்க | வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாதா? தெளிவான தகவல் இல்லை என்று புகார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ