வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாதா? தெளிவான தகவல் இல்லை என்று புகார்!

பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று அடையாளப் பதிவுக்கு தடையா? தெளிவுப்படுத்தவும் முறைப்படுத்தவும் சென்னை பெரு நகர காவல் துறைக்கு  சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!  

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2024, 07:53 AM IST
  • வாகனங்களில் ஸ்டிக்கர் ஓட்ட தடை.
  • மே 2ம் தேதிக்குள் அகற்ற வலியுறுத்தல்.
  • இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும்.
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாதா? தெளிவான தகவல் இல்லை என்று புகார்! title=

சென்னை பெரு நகர போக்குவரத்து காவல் துறை கடந்த 27-04-2024 அன்று வெளியீட்டுள்ள செய்தி வெளியீடு எண்.89/04/2024 பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களிடையே பெரும் குழப்பத்தையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளது. பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், பத்திரிகை, ஊடக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள்  தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களில் PRESS/ MEDIA என்ற அடையாள ஸ்டிக்கர் இருக்கின்ற நடைமுறை நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு, அரசின் செய்தித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு வாகன அடையாள  ஸ்டிக்கர்களை வழங்கி வருகிறது.  ஊடகங்களில் பணியில் இருக்கும். 

மேலும் படிக்க - 'எனது மொபைலும் ஒட்டு கேட்கப்படுகிறது...' குண்டை தூக்கிப்போட்ட ஹெச். ராஜா

அனைவருக்கும் அரசின் வாகன அடையாள ஸ்டிக்கர்கள் வழங்குவதில்லை, நடைமுறையில் அது சாத்தியமும் இல்லை என்றிருக்கக் கூடிய நிலையில்  காவல் துறையின் செய்தி வெளியீடு குழப்பங்களையும் அதிருப்தியையுமே உருவாக்கியுள்ளது. பத்திரிகை/ ஊடகங்களில் பணியாற்றுவோர் அவரவர் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்துள்ளனர். பத்திரிகையாளர்கள் / ஊடகவியலாளர்கள்  என்பதை உரிய ஆவணங்கள் அடிப்படையில் அடையாளத்தை உறுதி செய்வதில் எவ்வித சிக்கலும், தயக்கமும் இருக்கப் போவதில்லை. இரவு நேரப்பணி, விபத்து, இயற்கை பேரிடர் என பல சூழல்களில், செய்தி சேகரிக்கும் பணியின் போது வாகனத்தில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் பத்திரிகையாளர்கள் என்று அடையாளம் காண்பதற்கு காவல்துறைக்கும் உதவியாக இருக்கிறது.

முறைகேடாக ,தவறாக, போலியாக பத்திரிகை /ஊடக அடையாளத்தை பயன்படுத்துவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மாறாக சரியான திட்டமிடாமல்  தெளிவில்லாமல்  இப்படி ஒரு முன்னெடுப்பு எடுக்கப்படும் போது உண்மையான  பத்திரிகையாளர்- காவல் துறையினர் நல்லுறவை நிச்சயமாக பாதிக்கச் செய்யும் என்றே கருதுகிறோம். சமீபத்தில் சென்னை பெரம்பூர் பகுதியில் எவ்வித காரணமும் இன்றி தீக்கதிர் நாளிதழின் மூத்த பத்திரிகையாளர் ஒருவரின் வாகனத்தில் ஒட்டப்பட்டிருந்த  தமிழக அரசின் செய்தித் துறையால் வழங்கப்பட்ட பத்திரிகையாளர் வாகன ஸ்டிக்கரை வலுக்கட்டாயமாக போக்குவரத்து காவல் துறையினர் கிழித்துள்ளனர்.

இந்த தகவல் தற்போது தான் கவனத்திற்கு  அறிய வந்ததால்  இந்த செயலை மிகமோசமானதாக குறிப்பிடுவதுடன் கண்டிக்கின்றோம். பத்திரிகை, ஊடகங்களுக்கு தொடர்பில்லாதவர்கள், சமுக விரோதிகள் ஊடகம்/ PRESS என்று போலியாக பயன்படுத்துவதை  சட்டப்படி உறுதியாக தடுக்க வேண்டும் என்பதில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் உறுதியாக இருப்பதுடன் அரசுடன், காவல் துறையுடன் முழு ஒத்துழைப்பு தரவும் தயாராக உள்ளோம். இந்த நடவடிக்கைக்கு வாகன தணிக்கை உள்ளிட்ட செயல்பாடுகளை முறையான திட்டமிடலுடன் செயல்படுத்தி போலியாக எவரும் பத்திரிகை/ ஊடக அடையாளங்களை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என்றும்  காவல் துறையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது. 

சென்னை பெரு நகர காவல்துறை பத்திரிகையாளர் / ஊடகவியலாளர் வாகன அடையாள ஸ்டிக்கர் தொடர்பாக தெளிவான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்றும், வாகன தணிக்கை மிக கண்ணியமாகவும் நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம்  வலியுறுத்துகிறது என்று சென்னை பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலாளர் பாரதிதமிழன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க - ஹெச். ராஜாவுக்கு எதிரான 11 வழக்குகள்... ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் - அப்போ நெக்ஸ்ட்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News