ஒரு வினோதமான நிகழ்வாக, மத்திய புலனாய்குச் செயலகத்தின் பாதுகாப்பில் இருந்த சுமார் 45 கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோகிராம் தங்கம் காணாமல் போயுள்ளது. நாட்டின் மிகப் பெரிய, மிக நம்பகமான புலனாய்வு நிறுவனமான CBI-யின் பாதுகாப்பில் இருந்த தங்கம் காணாமல் போயுள்ளது என்பது பலருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2012 ஆம் ஆண்டு சென்னையில் சுரானா கார்பரேஷனில் CBI நடத்திய சோதனையில், சுமார் 400.5 கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை CBI தனது பாதுகாப்பில் வைப்பதற்கு பதிலாக சுரானா கார்பரேஷனின் லாக்கரிலேயே வைத்தது.


ஆனால் இந்த லாக்கர்கள் CBI-ன் பாதுகாப்பில் பூட்டப்பட்டு, சீல் வைக்கப்பட்டு இவற்றின் சாவிகள் CBI-க்கு அளிக்கப்பட்டன. CBI இந்த லாக்கர்களின் 72 சாவிகளை CBI வழக்குகளுக்கான சென்னை முதன்மை சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது.


இப்படிப்பட ஒரு பாதுகாப்பான சூழலில் 100 கிலோவுக்கும் அதிகமான தங்கம் காணாமல் போவது என்பது நடக்கமுடியாத ஒரு விஷயமாகும். ஆனால், அப்படி நடந்துள்ளது. காணாமல் போன தங்கத்தைப் பற்றி விசாரிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் (Madras High Court) இந்த வழக்கு விசாரணையை சிபி-சி.ஐ.டி-யிடம் அளித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு பற்றிய விவரங்கள் வெளிவரத் தொடங்கின.


இந்தியாவைப் (India) பொறுத்தவரை, CBI உச்ச நிலையில் இருக்கும் புலனாய்வு நிறுவனமாகும். மாநில காவல்துறை மற்றும் புலனாய்வு நிறுவனங்களால் தீர்க்க முடியாத வழக்குகள் CBI விசாரணைக்கு மாற்றப்படுகின்றன. மேலும், சில முக்கிய நபர்கள் குறித்த வழக்குகளும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளும், அதிக உணர்திறன் கொண்ட வழக்குகளும் நேரடியான அரசாங்கத்தால் CBI-க்கு ஒப்படைக்கப்படுகின்றன. முக்கிய வழக்குகளில் CBI செய்துள்ள நேர்த்தியான விசாரணையும், CBI-யின் பாரபட்சமற்ற விசாரணை முறைகளும் எப்போதும் பாராட்டப்பட்டுள்ளன.


வழக்கு CBI-யிடம் ஒப்படைக்கப்பட்டால், அதில் தெளிவான நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, நாட்டு மக்களுக்கும் வெகுவாக உள்ளது. இந்த நிலையில், CBI பாதுகாப்பில் இருந்த தங்கத்தைக் காணவில்லை என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.


CBI பாதுகாப்பில் இருந்த தங்கம் காணாமல் போனது CBI-க்கு ஒரு பெரிய பின்னடைவாக காணப்படுகிறது. இது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, CBI அளித்த பதில் மிகவும் வினோதமாக இருந்தது. தங்கம் கைப்பற்றப்பட்ட போது, ​​தங்கக் கம்பிகள் அனைத்தையும் ஒன்றாக எடைபோட்டதாக சிபிஐ கூறியது.


ஆனால் சூரானாவுக்கும் SBI-க்கும் இடையிலான கடன்களைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட லிக்விடேட்டரிடம் ஒப்படைக்கும்போது, ​​அவை தனித்தனியாக எடைபோடப்பட்டன. அதுவே முரண்பாட்டிற்கு காரணம் என்றும் CBI கூறியுள்ளது. எனினும் இந்த விளக்கத்தை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறிவிட்டது.


ALSO READ: CBI பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் ‘missing’: 45 கோடி ரூபாய் தங்கம் எங்கே போனது?


இந்த வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் CB-CID-யிடம் ஒப்படைத்துள்ளது. ஏற்கனவே தங்கம் தொலைந்ததால், பின்னடைவை சந்தித்துள்ள CBI-யால், CB-CID-யிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டதை சகித்துக்கொள்ள முடியவில்லை.


உள்ளூர் போலீசிடம் தங்கள் வழக்கு விசாரணைக்குப் போனால் அது தங்களது கௌரவத்தை பாதிக்கும் என CBI சென்னை உயர் நீதிமன்றத்திடம் கூறியது. இதைக் கேட்டு கோவப்பட்ட சென்னை உயர் நீதிமன்றம், “இப்படிப்பட்ட எந்த அனுமானமும் சட்டத்தில் இடம்பெறவில்லை. காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் நம்பகத்துக்கு உரியவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள். CBI-க்கு தனியாக கொம்பு முளைத்திருக்கிறது என்றும் அனைத்து உள்ளூர் காவல்துறையும் அவர்களின் வால் போன்றவர்கள் என்றும் யாராலும் கூற முடியாது” என்று குறியுள்ளது.


இப்போது எஸ்.பி ரேங்கில் உள்ள ஒரு CB-CID காவல்துறை அதிகாரி இந்த வழக்கை விசாரிப்பார் என நீதிமன்றம் இறுதியாகத் தெரிவித்துள்ளது.  


ALSO READ: இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு தங்கம் கடத்தப்படுவதாக தகவல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR