சென்னை: கொரோனா வைரசால் ஏற்பட்ட COVID-19 தொற்றால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தமிழக வேளான்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் கடுமையான பின்னடைவை ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அறிக்கையின்படி, அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவருக்கு பல உபகரணங்கள் மூலம் வெளிப்புற மருத்துவ ஆதரவுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், அவரது ஆக்ஸிஜன் அளவு மேலும் குறைந்துவிட்டது.


முன்னதாக, மருத்துவமனை நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது. "கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது” என்று அதில் குறப்பட்டிருந்து.


ALSO READ: India COVID-19 Update: 3 மாதங்களில் மிக குறைந்த அளவாக 36,470 புதிய பாதிப்புகள்..!!!


முதல்வர் பழனிசாமியின் (K Palanisamy) தாய்க்கு மரியாதை செலுத்துவதற்காக சேலம் செல்லும் வழியில் ஏற்பட்ட கடுமையான மூச்சுத் திணறலைத் தொடர்ந்து அக்டோபர் 13 ஆம் தேதி துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆரம்பத்தில் சோதனையில் அவருக்கு கோவிட் -19 தொற்று இல்லை என வந்தாலும், கடந்த வாரம் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்து.


வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு தற்போது ஈ.சி.எம்.ஓ மற்றும் வென்டிலேட்டரில் இருக்கிறார். அவரது உடல்நிலையை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.


ஞாயிற்றுக்கிழமையன்று, முதக்வர் கே. பழனிசாமி, மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் சுகாதார அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் காவிரி மருத்துவமனைக்குச் சென்று துரைக்கண்ணுவின் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.


ALSO READ: தீபாவளிக்கு Shopping சென்று தீரா வலியை free-யாக பெறாதீர்கள்: நிபுணர்கள் எச்சரிக்கை.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR