செங்கம்:  செங்கம் அருகே சின்னகல்தான் பாடி என்ற கிராமத்தில் இரும்பை உருக்கும் உலைக்களம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவண்ணாமலை (Thiruvannamalai) மாவட்டம் செங்கம் வட்டத்தில் வரலாற்று சுவடுகள் நிறைந்து உள்ளன. அதன் தொடர்ச்சியாக சின்னகல்தான் பாடி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இரும்பை உருக்கும் உலைக்களம் அமைந்த சுவடுகள் உள்ளது என தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் கூறினார்.


மேலும் அவர் இது குறித்து கூறும் போது "வரலாற்றுச் சுவடுகளால் சூழ்ந்தது செங்கம் வட்டம். பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், நடுகல், கல்வெட்டுகள் என பல சுவடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் சின்னகல்தான் பாடி கிராமத்தில் இரும்பை உருக்கும் உலைக்களம் அமைத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது அமைக்கப்பட்டிருக்கலாம். 5 ஏக்கர் விவசாய நிலத்தில் உலைக்களம் இருந்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது. அந்தப் பகுதியை கரிமேடு என கிராம மக்கள் அழைத்து வருகின்றனர். இரும்பை வார்க்க சுடுமண் குழாய், மண் குடுவைகள், சிட்டங்கள், போன்றவை சிதறிக் கிடக்கின்றன.


ALSO READ: கீழடி & திருமலை நாயக்கர் அரண்மனை: அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு


விவசாய பணி செய்யும் போது, உடைந்த நிலையில், அம்மன் சிலை, உரல், அம்மிக்கல் போன்ற பழமையான பல்வேறு கல் தடயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை மரத்தடியில் விவசாயிகள் வைத்துள்ளனர்.


இந்தப் பகுதியில் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி (Excavation) செய்தால் மேலும் பல வரலாற்று சுவடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு கிடைக்கும் சுவடுகள் மூலம் இது எவ்வளவு தொன்மையான பகுதி என்பது தெரியவரும் என அவர் தெரிவித்தார்.


ALSO READ: கீழடியின் கொடை குறைவதில்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு உருக்கம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR