உலகத்தரத்தில் கீழடியில் ரூ.12.21 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: முதல்வர்

கீழடி அகழாய்வின் போது கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Nov 1, 2019, 08:02 PM IST
உலகத்தரத்தில் கீழடியில் ரூ.12.21 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்: முதல்வர்
File photo

சென்னை: தமிழ்நாடு நாளான இன்று சென்னை கலைவாணர் அரங்கில் உரையாற்றிய தமிழக முதல்வர் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், அனைவரின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருந்த கீழடி அருங்காட்சியகம் சம்பந்தமானது. ஆம், ரூ.12.21 கோடி செலவில் கீழடி குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இன்று உலக முழுவதும் உள்ள தமிழகர்கள் தமிழ்நாடு நாள் கொண்டாடி வருகின்றனர். அதையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் விழா ஏற்பாடு செய்யப்படிருந்தது. இந்த விழாவில் கலந்துக்கொண்டு பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு நாள் குறித்து பேசினார். பின்னர் கீழடி குறித்து பேசிய அவர்,  கீழடி அகழாய்வு தமிழர் நாகரிகத்தை உலகத்திற்கே பறைசாற்றி உள்ளது. அதனை போற்றும் விதமாக அகழாய்வின் போது கிடைத்த பொருட்களை காட்சிப்படுத்த ரூ.12.21 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இந்த கீழடி அருங்காட்சியகம் கொந்தகை கிராமத்தில் அமைக்கப்படும் என்று கூறினார். 

இந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர், அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.