TN Assembly: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது
நாளை கலைவாணர் அரங்கில் தொடங்கும் தமிழக 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாதவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. சட்டப்பேரவை மாண்புகளின்படி, மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவையை தொடங்கிவைத்து உரையாற்றுவார்.
கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தலைமையிலான கூட்டணி வெற்றிவாகை சூடியது. முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி பொறுப்பேற்றார். வழக்கமாக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் முதல் கூட்டத்தில் கலந்துக் கொள்வார்கள். ஆனால் இந்த முறை நடைமுறைகளை சற்று மாற்றியமைத்துள்ளது கொரோனா பெருந்தொற்று.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக அரசு செய்துள்ளது. தற்போது நாளைய முதல் கூட்டத்திற்காக சட்டப்பேரவைக்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாதவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இது எம்.எல்.ஏக்களுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவை அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும். அதற்கான முன்னேற்பாடுகள் ஏற்கெனவே முடிக்கப்பட்டுள்ளன.
Also Read | அடுத்த கட்ட ஊரடங்கில் எதற்கெல்லாம் அனுமதி? இன்று முக்கிய அறிவிப்பு
சட்டப்பேரவை கூட்டம் கூட்டுவது தொடர்பாக சமீபத்தில் ஆளுநரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவும் ஆளுநரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். முறையான அழைப்பைப் பெற்றுக் கொண்ட ஆளுநர் அனுமதியளித்ததை தொடர்ந்து நாளை கூட்டத் தொடர் தொடங்குகிறது.
ஜூன் 21 காலை 10 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுவார்.
Also Read | Chennai: Apollo மருத்துவமனையில் கிடைக்கும் Sputnik V தடுப்பூசிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR