தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழக அரசியல் களத்தில் பெரும் சர்ச்சைகளாக எதிரொலிக்க தொடங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி கட்டுப்பாட்டில் காவல்துறை மற்றும் சட்டம் ஒழுங்கு வரும் நிலையில், அந்த துறையை வைத்து எதிர்கட்சிகள் அரசியல் சதுரங்க ஆட்டத்தை தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் அருகே சாலையில் வீசப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்திருப்பதுடன், திமுக அரசின் கீழ் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டிருப்பதை இந்த சம்பவம் வெட்ட வெளிச்சமாக்கியிருப்பதாக சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அண்ணன் கொலை? அம்மா - தங்கை எடுத்த விபரீத முடிவு! கண்கலங்க வைத்த சம்பவம்!


அண்மைக்காலமாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே முட்டல் மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றிருப்பதால், இந்த பிரச்சனையை கையில் எடுத்திருக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் ஆளுநருக்கு பாதுகாப்பில்லை என்று பகிரங்கமாக அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளனர். இதில் அண்ணாமலை ஒருபடி மேலேபோய் இந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் தமிழக உளவுத்துறையின் தோல்வியைக் காட்டுவதாக சாடியுள்ளார். ஆனால் இதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மனநோயாளி ஒருவர் செய்த சம்பவத்துக்கும் அரசு மீது வீண் பழிசுமத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என சாடியுள்ளார். ஆளுநர் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு செயல்படாமல், பாஜக தலைவர்கள் போல் பேசினாலும், அவருடைய பாதுகாப்புக்கு எந்த குறையும் இல்லை என கூறியுள்ளார். 


இது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரிக்கும்போது, ஆளுநர் மாளிகை நுழைவு வாயில் முன்பு பெட்ரோல் குண்டுவீசிய கருக்கா வினோத்தின் பின்புலத்தை கட்டாயம் விசாரிக்க வேண்டும். இதற்கு முன்பு பாஜக அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டு வீசி கைதான அவர் இப்போது திட்டமிட்டே இப்படியொரு சம்பவத்தை செய்திருப்பது போல் தெரிகிறது. அவர் யாருடைய தூண்டுதலின்பேரிலாவது இப்படி செயல்படுகிறாரா? என்பது கட்டாயம் விசாரிக்க வேண்டும் என்பது திமுகவினர் வலியுறுத்தல். ஆட்சிக்கும், கட்சிக்கும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றிருப்பதால், இதனை எளிதாக கடந்து செல்லக்கூடாது என திமுகவினர் வலியுறுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நெருங்கும் நேரத்தில் கலவர நோக்கத்துடன் இன்னும் பெரிய பிரச்சனைகள் எல்லாம் தூண்டிவிடப்பட வாய்ப்பு இருக்கிறது, சாதி மத மோதல்கள் சார்ந்து சிக்கல்கள் எழ வாய்ப்பு இருப்பதால் காவல்துறையும், உளவுத்துறையும் இனி விழிப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சரும் அறிவுறுத்தியுள்ளாராம். 


இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பதட்டத்தை உண்டாக்கும் வகையில் செயல்படுபவர்களை கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாம் காவல்துறை. சமூகவலைதள கணக்குகள், மோதல் உருவாகும் பகுதியில் இருக்கும் கட்சி சார்ந்த ரவுடிகள் ஆகியோரும் இந்த கண்காணிப்பு வட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறும் என்ற தகவல் வரும்பட்சத்தில் முன்கூட்டியே கைது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். 


மேலும் படிக்க | ஆளுநர் மாளிகை விவகாரத்தை பெரிதாக்கும் பாஜக... எங்களுக்கு கவலையில்லை - ரகுபதி பதிலடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ