ஆளுநர் மாளிகை விவகாரத்தை பெரிதாக்கும் பாஜக... எங்களுக்கு கவலையில்லை - ரகுபதி பதிலடி

Raj Bhavan Petrol Bomb Issue: ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயன்ற சம்பவத்தை பாஜக அரசியலாக்கினாலும் ஆக்கட்டும் என்றும் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்றும் அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 26, 2023, 12:42 PM IST
  • யாரோ ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசியதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் - ரகுபதி
  • இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏதும் கெடவில்லை - ரகுபதி
  • இந்த வழக்கை என்ஐஏ விசாரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார் - ரகுபதி
ஆளுநர் மாளிகை விவகாரத்தை பெரிதாக்கும் பாஜக... எங்களுக்கு கவலையில்லை - ரகுபதி பதிலடி title=

Raj Bhavan Petrol Bomb Issue: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கருக்கா வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டுவீச முயன்றது பெரும் பரபரப்பை உண்டாக்கியது. அவரை உடனடியாக போலீஸார் கைது செய்த நிலையில், அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவு வந்தது. நேற்று நள்ளிரவு அவரை சிறையில் அடைக்க இயலாததால், அதிகாலை 6.15 மணி வரை சிறை வாசலில் விடிய விடிய காத்திருந்து அதன்பின் அவரை சிறையில் அடைத்தனர்.

எதிரியாக இருந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம்

அந்த வகையில், அரசியல் ரீதியாக தமிழ்நாடு அரசு மீது பாஜக தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இதுகுறித்து கூறுகையில், "ஆளுநர் மாளிகையில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணையும் மேற்கொண்டு வருகிறோம். ஆளுநருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது. இந்த சம்பவத்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு ஏதும் கெடவில்லை.

யாரோ ஒரு மனநோயாளி பெட்ரோல் குண்டு வீசியதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும். ஆளுநர் மாளிகையின் வெளியே பெட்ரோல் குண்டு வீசப்பட்டவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு உள்ளது. சாலையில் நடந்து சென்ற அந்த நபர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை அங்கு வீசியுள்ளார். இதில் எந்த உளவுத்துறை தோல்வியும் இல்லை.

எதிரியாக இருந்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க கூடியவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். சம்பந்தப்பட்ட குற்றவாளி சிறைச்சாலையில் திட்டம் தீட்டியயதாக எங்களுக்கு தெரியவில்லை. திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்குடன் வேறு யாரோ சிலர் இதை செய்திருக்கலாம் என்ற அடிப்படையிலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் படிக்க | ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசிய ரவுடி கருக்கா வினோத் - அண்ணாமலை ரியாக்ஷன்

அரசியலாக்கினாலும் ஆக்கட்டும்...

வானதி கோரிக்கை வைத்துள்ளது இந்த வழக்கை என்ஐஏ விசாரிப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு எப்படி இருந்தது என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த விவகாரத்தை பாஜக அரசியலாக்கினாலும் ஆக்கட்டும். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

தமிழகத்தில் பாஜகவால் கால் வைக்க முடியாது. அவர்கள் தலைகீழாக நின்றாலும் பாஜக தமிழகத்தில் வளராது. இந்த விவகாரத்தை அரசியல் ஆக்கினாலும் தமிழக மக்களிடம் எடுபடாது. ஆளுநர் குற்றஞ்சாட்டும் போது அதற்கு பதில் அளிப்பது எங்களின் கடமை. அதைத்தான் திமுக அரசு செய்து வருகிறது.
ஒரு போதும் இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நடப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

தமிழகத்தின் மீதும், தமிழக அரசின் மீதும் மக்களிடம் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் முதல் நபராக ஆளுநர் உள்ளார். திமுக எப்பொழுதுமே ஆளுநர் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியது கிடையாது. இந்த விவகாரத்தை தொடங்கியது ஆளுநர்தான். ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். எதிர்க்கட்சியை போன்று ஆளுநர்தான் ஆளும் கட்சியை விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தில் நாங்களே பெட்ரோல் வெடிகுண்டு வீசும் சம்பவத்தை நாங்கள் எப்படி அரங்கேற்றுவோம்" என்றார்.

ஆளுநர் மாளிகை புகார்

முன்னதாக, இந்த சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் சென்னை காவல் ஆணையருக்கு ஆளுநர் மாளிகை புகார் கடிதம் ஒன்றை அளித்தது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை அதன் X பக்கத்தில்,"ஆளுநர் மாளிகை மீது இன்று (அதாவது நேற்று அக். 25) பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அதானி குடும்பத்திற்காக பாஜக உழைக்கிறது-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News