தாராபுரம்: அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் பாஜக - இந்து மக்கள் கட்சியினர் அடிதடி
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சி மற்றும் பாஜக நிர்வாகிகள் சாலையில் கட்டைகளை கொண்டு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு நிலவியது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலையில் அடிதடி
இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் இவரது உதவியாளர் சங்கர் ஆகியோர் நேற்று மாலை தாராபுரம் பேருந்து நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி, திடீரென இரும்பு கம்பியால் ஈஸ்வரன் மற்றும் சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளார். உடனே அவர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில், ஈஸ்வரன் - சங்கர் ஆகியோர் தலையில் காயம் ஏற்பட்டது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மங்களம் ரவியின் தலையிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனை பார்த்த பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார். எனினும் அவர்களுக்குள்ளான தாக்குதல் நீடித்ததால் பங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | பேனா நினைவுச் சின்னம்: மெரினாவின் அடையாளம் போய்விடும்- ஜெயக்குமார்
சமூகவலைதளங்களில் வீடியோ
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூன்று பேரையும் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே இந்து மக்கள் கட்சி பாஜக நிர்வாகிகள் ஆகியோர் சாலையில் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில் ஒருவரை ஒருவர் இரும்பு கம்பி மற்றும் கட்டையால் தாக்கிக் கொள்ளும் காட்சிகளும், இதனைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் பயத்தில் அலறி ஓடும் காட்சிகளும் இதில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரச்சனையின் பின்னணி
தாராபுரத்தில் பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் நடுரோட்டில் ஏன் மோதிக் கொண்டார்கள் என சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பிரதமர் மோடியின் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்துள்ளது. இது குறித்து இந்து மக்கள் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் தவறாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனடிப்படையில், தாராபுரம் பேருந்து நிலையம் அருகே திரண்ட இரு தரப்பினரும் அடிதடி மோதலில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் உலா வருகிறது.
மேலும் படிக்க | அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ