அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்!

பாஜக தலைவர் அண்ணாமலை தமிழர்கள் மீதும், தமிழ் தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்ட நபர் கிடையாது என்று தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் சுல்தான் கரூரில் பேட்டி.  

Written by - RK Spark | Last Updated : May 1, 2023, 06:26 AM IST
  • இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு.
  • தேசிய கட்சியின் ஆதரவோடு சிலர் தவறான கருத்துக்களை பேசி வருகின்றனர்.
  • இத்தகைய செயலை தான் பாசிசம் என்று குறிப்பிட்டேன் - அமீர்.
அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்! title=

கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியில் பிரெண்ட்ஸ் பெடரேஷன் என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில் குற்ற செயல்களை தடுக்கவும், கண்காணிக்கவும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக 100 சிசிடிவி கேமராக்கள் அர்ப்பணிக்கும் நிகழ்வு தனியார் அரங்கில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ரவி, திரைப்பட இயக்குனர் அமீர் சுல்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் 100 சிசிடிவி கேமராக்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.  அப்போது செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட இயக்குனர் அமீர் சுல்தான்,  நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் மாற்றம் வேண்டும் என்பதற்காக நடந்துள்ளது. இந்த தேர்தலும் சாதாரண பொது தேர்தல் போல மாறிவிட்டது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

மேலும் படிக்க | தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் நூதன முறையில் எதிர்ப்பு!

உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து வெறுப்பு பேச்சுகளை பேசுபவர்கள் மீது அரசு வழக்கு தொடர வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. குறிப்பிட்ட சமூகத்தினர் மீது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தவறான கருத்துக்களை பலரும் பேசி வருகின்றனர். இந்தியா என்பது ஒரு கூட்டமைப்பு. தேசிய கட்சியின் ஆதரவோடு சிலர் தவறான கருத்துக்களை பேசி வருகின்றனர். இத்தகைய செயலை தான் பாசிசம் என்று குறிப்பிட்டேன். அண்ணாமலை தமிழர்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் கிடையாது. ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லிவிட்டு, சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். அவர் எந்த காலத்திலும் தமிழர்கள் மீதும், தமிழ்த்தாய் வாழ்த்து மீதும் அக்கறை கொண்டவராக என்னால் பார்க்க முடியவில்லை.  புர்கா, பர்ஹானா போன்ற திரைப்படங்கள் வந்து கொண்டேதான் இருக்கும். எல்லா படங்களுக்கும் தடை கேட்டுக் கொண்டே இருக்க முடியாது என்று அமீர் கூறினார்.  

கர்நாடக மாநிலத்தில் சிவமோகா மாவட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். சிவமோகா தமிழ் சங்கம் புலம்பெயர்ந்த கன்னட தமிழர்கள் இடையே பிரபலமான தமிழ் சங்கமாக திகழ்ந்து வருகிறது. இதனிடையே வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவை பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சார கூட்டம் பாஜக கட்சி சார்பில் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஈஸ்வரப்பா தலைமை ஏற்ற நிலையில் சிறப்பு விருந்தினராக அண்ணாமலை கலந்து கொண்டார்.  இந்நிலையில் கூட்டம் துவங்கியவுடன் அங்கிருந்த தமிழர்கள் முதலில் தமிழ் தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக இசைக்க வைத்தனர். தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடிக்கொண்டிருந்த போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் எழுந்து நின்று அதற்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். மேலும் மேடையில் இருந்த தலைவர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர்‌. 

அப்போது, தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக குறுக்கிட்டு பாடி கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்த வைத்தார்.  பின்பு, பெண்கள் யாராவது இங்கு வந்து கன்னட நாட்டு கீதத்தை பாடும்படி அவர் வலியுறுத்தினார். இதனையடுத்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்த தமிழர்கள் ஒலிபெருக்கி மூலமாக கன்னட நாட்டின் கீதத்தை பாட வைத்தனர். தேர்தல் களத்தில் தமிழர்கள் இடையே வாக்கு சேகரிக்க வந்த பாஜக கட்சித் தலைவர்கள், குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும், தமிழ் தாயை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ் தாய் வாழ்த்து பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆருத்ரா மோசடி வழக்கில் பாஜகவினரின் தொடர்பு பற்றி விசாரணை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News