நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழ்நாடு பாஜகவில் சலசலப்புகள் உட்சத்தை எட்டியிருக்கிறது. மாநில தலைவர் அண்ணாமலை தனக்கென ஒரு பாதையை உருவாக்கி அதில் பயணித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்க மறுத்த அக்கட்சியின் சீனியர்கள், தேசிய தலைமைக்கும் இது குறித்து ரிப்போர்ட் தொடர்ச்சியாக அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதற்கு எந்த ரெஸ்பான்ஸூம் இல்லாததால் சோர்ந்துபோய் இருந்த சமயத்தில், அதிமுக கூட்டணி விவகாரம் கட்சிக்குள் சலசலப்பை உருவாக்கியது. திமுகவை விமர்சிப்பதற்கு இணையாக அதிமுகவையும் அண்ணாமலை கடுமையாக விமர்சித்தார். ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களை அவர் நேரடியாக தாக்கிப் பேசியதால் இனியும் பாஜகவுடன் கூட்டணியை தொடர்வதில் நியாயமில்லை என அதிமுக திட்டவட்டமாக முடிவெடுத்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது - மு.க.ஸ்டாலின்


இதனை பாஜகவின் தேசிய தலைமைக்கும் நேரடியாக சென்று தெரிவித்துவிட்ட அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. அக்கட்சியின் பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமியும் இதனை உறுதிபடுத்தியதுடன் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்துவிட்டார். இது குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை, அவர்களுக்கு தான் பின்னடைவு. வருமானவரித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை எல்லாம் இருக்கிறது, இதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என மிரட்டும் தொனியில் பேசினார்.


அவரின் இந்தப் பேச்சு அதிமுகவினரை மேலும் கடுப்பாக்கியது. இனிமேலும் மவுனம் காக்கக்கூடாது என அண்ணாமலையை நேரடியாக அதிமுக தலைவர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இந்த நேரத்தில் தான் அண்ணாமலை உடனடியாக டெல்லி வருமாறு பாஜக தேசிய தலைமை அழைப்பு விடுத்தது. பாதயாத்திரையில் இருந்த அவர், அதனை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக டெல்லி சென்றார். அங்கு நிர்மலா சீதாராமனிடம் விளக்கம் அளித்த அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர்களையும் சந்தித்தார். ஆனால் அமித்ஷா, பிரதமர் மோடியை அவர் சந்திக்க முடியவில்லை. இந்த சந்திப்பில் அண்ணாமலையின் நடவடிக்கைக்கு தேசிய தலைமை கடும் அதிருப்தி தெரிவித்தாக கூறப்படுகிறது. கூட்டணி குறித்து ஏதும் பேசக்கூடாது என்றும், கட்சியின் செயல்பாடுகளில் இருக்கும் அதிருப்திகளையும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.



இதில் அண்ணாமலைக்கு ஏக வருத்தமாம். டெல்லியில் இருந்து திரும்பிய அவர் பத்திரிக்கையாளர்களை சந்திக்காமல் சென்றதுடன் உடனடியாக தன்னுடைய பாதயாத்திரையையும் ஒத்திவைத்துவிட்டார். மருத்துவ காரணங்களுக்காக தள்ளி வைத்திருப்பதாகவும் அண்ணாமலை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இன்று சென்னை அமைந்தகரையில் நடைபெறும் பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் கூட்டம் தொடங்கும் நேரத்துக்கு வரவில்லை. தாமதமாகும் என சொல்லப்பட்டதால் கேசவ விநாயகம் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் அண்ணாமலையின் வருகைக்காக மேடையில் காத்திருந்தனர். தாமதம் என்ற தகவல் சொல்லப்பட்டவுடன், வந்தே மாதரத்துடன் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை தொடங்கிவிட்டனர். 


இதில் இன்னொரு சர்பிரைஸ் என்னவென்றால் பாஜக கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்கு வைக்கப்பட்டிருந்த தலைவர்களின் புகைப்படங்களுக்கு கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதில் பாஜக சங் பரிவார் தலைவர்கள் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் புகைப்படங்களுக்கு மத்தியில் நேருவின் புகைப்படமும் இருந்தது. மறைந்த பிரதமர் நேருவை பிரதமர் மோடி அடிக்கடி விமர்சிக்கும் நிலையில் அவருடைய புகைப்படம் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. 


மேலும் படிக்க | எல்லாம் முடிஞ்சு போச்சு..! கூட்டணி குறித்தான கேள்விக்கு வானதி சீனிவாசன் பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ