சென்னை: இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்த சமயத்தில் பூஞ்சைத் தொற்றுக்கள் பாதிப்பும் ஏற்பட்டன. அதில் மியுகோர்மைகோசிஸ்' என்று சொல்லப்படும் கருப்பு பூஞ்சை தாக்குதல் அதிகமானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களையும், நீரிழிவு, புற்றுநோய், ஹெச்ஐவி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் கருப்பு பூஞ்சை நோய் அதிகம் பாதிக்கிறது. கொரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளாலும் பாதிப்பு ஏற்பட்டது. 


தமிழகத்தில் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தமிழக அரசு, கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்படுவது குறித்து ஆராய்வதற்கு பத்துக்கு மேற்பட்டவர்களைக் கொண்ட நிபுணர் குழு அமைத்தது. நிபுணர் குழு இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது.


Also Read | கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு: தமிழக அரசு


அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கருப்பு பூஞ்சை சிறப்பு நிபுணர் குழு, முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு அது குறித்து விளக்கமளித்ததாக தெரிவித்தது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் கட்டுப்படுத்துவதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.


இந்த நோய் ஏற்படத் தொடங்கிய காலகட்டத்தில் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு நோயாளிகள் வந்ததால் பலி எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அதற்கு காரணம் பூஞ்சை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு இல்லாததே காரணம் என்று குழுவினர் தெரிவித்தனர். மேலும் தற்போது நோயின் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சைக்கு நோயாளிகள் வருவதால், குணமடையும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தனர்.


மேலும், கருப்பு பூஞ்சையின் தொடக்க காலகட்டத்தில் அதற்கான மருந்து இல்லாத நிலையில் அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகள் கொடுக்கப்பட்டன. தற்போது, பூஞ்சை நோயை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் பற்றிய தெளிவு ஏற்பட்டுவிட்டது. இது, நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே கருப்பு பூஞ்சை நோயை தமிழகத்தில் கட்டுப்படுத்துவதும், முற்றிலும் இல்லாமல் போக்குவதும் சாத்தியமானதே என்று சிறப்பு குழுவினர் தெரிவித்தனர்.


ALSO READ | தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR