சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை மேயர் சென்ற கார் விபத்து:


சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. மேயரின் கார் முன்னாள் சென்ற கார் மீது மோதிய நிலையில் பின்னால் வந்த லாரியும் மேயரின் காரின் பின் புறத்திலும் மோதியதில் கார் சேதமடைந்துள்ளது. நல்ல வேளையாக மேயர் பிரியா காயமின்றி உயிர் தப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், பிரியா சென்று கொண்டிருந்த காரை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு லேசாக அடிப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக, தற்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | குழந்தையை கடித்து குதறி, சூடு வைத்து டார்ச்சர்!


விபத்து நடந்தது எப்படி?


பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அருகே சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை மேயர் பிரியாவின் காருக்கு முன்பாக சென்ற கார் எதிர்பாராத விதமாக திரும்பிய நிலையில் அந்த காரின் மீது மேயரின் கார் மோதிய நிலையில் மேயர் காரை பின் தொடர்ந்து வந்த லாரியும் மேயரின் காருக்கு பின்புறமாக மோதியுள்ளது. இதன் காரணமாக மேயரின் கார் சேதமடைந்துள்ளது.


விபத்து நடைபெறும் போது மேயர் பிரியா காரில் இருந்துள்ளார் ஆனால் அவருக் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் உடனடியாக அவர் வேறு வாகனத்தில் சென்னை நோக்கி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. ஓட்டுநருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


இந்த விபத்தின் காரணமாக சென்னீர்குப்பம் பெங்களூரு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு வந்த போக்குவரத்துக் காவல் துறையினர் வாகன நெரிசலை சரி செய்தும் விபத்து குறித்து விசாரணையும் நடத்தினர்.


விபத்துக்கான காரணம்!


மேயர் பிரியா சென்று கொண்டிருந்த நெடுஞ்சாலையில் விளக்கு வசதி இல்லாததே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணை தெரிய வந்துள்ளது சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சாலையில் மின்விளக்குகள் எரிவதில்லை  என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | விபரீதத்தில் முடிந்த டீன் ஏஜ் காதல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ