தமிழகத்தில் வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய நாளை மீண்டும் தமிழக சட்டசபை கூடுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர் தமிழக ஆளுநரின் உரையுடன் கடந்த மாதம் சனவரி 2 ஆம் நாள் தொடங்கி சனவரி 8 ஆம் நாள் வரை நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபை கூடுகிறது. அதன் பின்னர் தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்வார். ஓ.பன்னீர்செல்வம் எட்டாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழக பட்ஜெட்டில் பல முக்கிய திட்டங்கள், அறிவிப்புக்கள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எதிர்கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, கோடநாடு கொலை விவகாரம், ஜாக்டோ - ஜியோ போராட்டம், உலக முதலீட்டாளர்கள் மாநாடு, குட்கா விவகாரம் போன்ற பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்புவார்கள் எனத் தெரிகிறது.