TN Budget 2022: தி.மு.க.வின் வாக்குறுதியும் - இன்றைய பட்ஜெட்டும்
DMK Promises: நீட் விலக்கு மசோதா, ஆவின் பால் விலை உயர்வு, குடும்ப தலைவிக்கு நிதியுதவி போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: ஒருபுறம் தமிழ்நாட்டின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உள்ளது. மறுபுறம் கொரோனா ஊரடங்கு காரணமாக சரிந்த மாநில வருவாய். இவற்றை எல்லாம் சரி செய்யவும் வருவாயை பெருக்க சீர்திருத்தங்களை தமிழ்நாடு நிதிஅமைச்சர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களின் எதிர்பார்ப்பையும், அதேநேரத்தில் அரசின் வருவாயை பெருக்கும் விதமாக இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செயப்படும் பட்ஜெட் இருக்கும் எனத் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த முறையும் பேப்பர் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் தமிழக சட்டசபையின் அலுவல் ஆலோசனைக் குழு இன்று பிற்பகலில் கூடி, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடத்துவது மற்றும் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் ஆகியவற்றைக் குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
2022-23 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் மக்கள் சார்பான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக இருக்குமா? மேலும் நீட் விலக்கு மசோதா, ஆவின் பால் விலை உயர்வு, குடும்ப தலைவிக்கு நிதியுதவி போன்ற விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் குறித்த செய்திக்ளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள Tamil Nadu Budget 2022 Live கிளிக் செய்யவும்
வருவாய் பற்றாக்குறையே ரூ.1.50 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்து விட்டது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழ்நாடு அரசின் வருவாய் 4-ல் ஒரு மடங்கு குறைந்துவிட்டது. 2020 - 2021 -ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி ஆகும். ஏற்கனவே தமிழ்நாடு பொருளாதாரம் பலவீனமாக இருந்த நிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமானது.
கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ. 3 லட்சம் கோடி. தமிழ்நாட்டில் தலா ஒவ்வொரு குடும்பத்தின் மீது ரூ.2,63,976 பொது சந்தாக்கடன் உள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் சுமை குறித்த கணக்கு சரிவர பராமரிக்கப்படவில்லை.
இவ்வளவு சிக்கல்களுக்கு இடையே இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
முன்னதாக 10 ஆண்டு கழித்து கடந்த ஆண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிக்கு வந்தது. இதையடுத்து இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிடிஆர் கடந்த வருடம் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்தார்.
மேலும் படிக்க: தமிழக பட்ஜெட் எதிர்ப்பார்ப்புகள் என்ன? மின்கட்டணம் உயர்த்தப்படுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR