வரும் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த பட்ஜெட் குறித்து அதிக எதிர்பார்ப்புகள் அரசியல் வட்டாரங்களில் இருந்தது.  கடந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 4.69%இலிருந்து 3.80% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அம்சங்களை அலசி ஆராய்ந்து, வரி வருவாயைப் பெருக்கும் வகையிலான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பட்ஜெட் தொடர் ஆரம்பமான சிறிது நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடாக திமுக கூட்டணி வெற்றி பெற்றதாக கூறி அதிமுக வெளிநடப்பு செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்க நடக்கும் பின்னணி வேலைகள்


பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள்:


- கொரானா பெருந்தொற்று காலத்தில் இருந்த நிதி நெருக்கடி குறைந்து உள்ளது
- தமிழ் மூதறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்பட்டு வருகிறது
- அம்பேத்கார் படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்
- சங்கம் பண்பாட்டு பெருவிழா முக்கிய நகர்புறங்களில் விரிவுப்படுத்தப்படும்
- தமிழ் கணிணி பண்பாட்டு மாநாடு தமிழில் நடத்தப்படும்
- தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
- மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்
- தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மெட்ரோ அமைக்கப்படும் -நிதி அமைச்சர்
- கிண்டி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துமனை இந்த ஆண்டு துவங்கப்படும்
- இலங்கை தமிழர் மறுவாழ்வு 3510 குடியுருப்பு வீடுகள் 176 கோடி மதிப்பீட்டில் கடடப்ட்டும்- திருச்சி அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 110 கோடி மதிப்பில் சிறப்பு கட்டிடங்கள் கட்டப்படும்
- பள்ளிக்கல்வித்துறையில்,  1500 கோடி செலவில் வரும் நிதியாண்டில் வகுப்பறைகள்,  கட்டடங்கள் கட்டப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டும் நடத்தப்படும்
- மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு  அருங்காட்சியம் கட்டப்படும்- உயர்கல்வி துறைக்கு 6967 கோடி நிதி ஒதுக்கீடு


- காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படும்
- மாற்று திறனாளி உரிமை திட்டத்திற்கு 39 சேவை மையம் துவங்கப்படும்
- கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகை 1500 இருந்த 2000 ஆக உயர்த்தி அறிவிப்பு
- மாற்று திறனாளி தொழில் முன்னேற றத்திற்கு கடன் உதவி
- மாற்றுத்திறனுக்கான தனியான டேட்டா பேஸ் அமைப்பு உருவாக்கப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் 500கோடி  ஒதுக்கீடு
- திருப்பத்தூர் பெரம்பலூர் அரியலூர் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு


- உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம்  1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் 29 சதவீதம் வருகை அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்து 477  மாணவிகள் புதிதாக  சேர்ந்துள்ளனர்.
- விவசாய கடன்களுக்கு 2390 கோடி ஒதுக்கீடு
- நகை கடன் வழங்க 1000 கோடி ஒதுக்கீடு
- மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு ₹600 கோடி ஒதுக்கீடு
- 341 ஏரி , 67 அணைக்கட்டு, 17 கால்வாய் புனரமைக்க ஒப்புதல்


- தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம்
- வடசென்னையில் உட்கட்டமைப்பு மேம்படுத்த 1000்கோடி ஒதுக்கீடு
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ஒதுக்கீடு
- அவிநாசி, சத்தியமங்கலம் சாலை உள்ளடக்கிய மெட்ரோ கோவையில்
- மதுரையில் 8500 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம்


மேலும் படிக்க | Tamil Nadu Budget Live: தாக்கல் செய்யப்பட்டது தமிழக பட்ஜெட் 2023! இத்தனை அறிவிப்புகளா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ