Tamil Nadu Budget 2023 Live Updates: தமிழக நிதிநிலை அறிக்கை 2023 கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான பல அறிவிப்புகளை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
தமிழக நிதிநிலை அறிக்கை 2023 கூட்டத் தொடர் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான பல அறிவிப்புகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
Tamil Nadu Budget 2023 Live Updates: தமிழக நிதிநிலை அறிக்கை 2023 கூட்டத் தொடர் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் முக்கியமான பல அறிவிப்புகளை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
TN budget 2023: பட்ஜெட் உரையை 2 மணி நேரத்தில் வாசி முடித்தார் நிதி அமைச்சர்; வாழ்க தமிழ், வெல்க தமிழ்நாடு என பேசி முடித்தார்
Tamil Nadu State Budget 2023: நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக் கட்டணத்தை 4 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைப்பு
Tamil Nadu Budget 2023-24: மகளிர் உருமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது போல தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்.
Tamil Nadu Budget: சென்னை ,மதுரை ,கோவை ,ஆவடி உள்ளிட்ட 7 மாநகராட்சியில் இலவச வைபை வசதி
- கோவில் நில ஆக்கிரமிப்பு மீட்டு எடுக்கப்பட்டு உள்ளது, 574 கோயில்களில் திருப்பணி நடக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது
- பழனி, சமயபுரம், திருத்தணி கோயில்கள் பெருத்திட்ட பணிகள் அமல்படுத்தப்படும்
- வரும் ஆண்டு 420 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்படும்
Tamil Nadu State Budget 2023: விருதுநகர் ,வேலூரில் ₹420 கோடி மதிப்பில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும்
22,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்
Tamil Nadu State Budget Live
சேலத்தில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்
- 77,000 கோடி மதிப்பில் புதிய மின்திட்டம் உருவாக்கப்படும்
- ஐனவரியில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த 100 கோடி ஒதுக்கீடு
- 221 புரிந்துணர்வு ஒப்பந்தம் இதுவரை போடப்பட்டு தொழில் துவங்கப்பட்டு உள்ளது
பசுமை மின் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம். இருசக்கர மின்வாகன உற்பத்தியில் இந்தியாவில் 46 சதவீத வாகனங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதாக பெருமிதம்.
- அவிநாசி, சத்தியமங்கலம் சாலை உள்ளடக்கிய மெட்ரோ கோவையில்
- மதுரையில் 8500 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் திட்டம்
- மதுரை திருமங்கலம்- ஒத்தகடை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம்
- பசுமை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க சிறப்பு நிறுவனம் ஒன்று அமைக்கப்படும்
- தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை வரை 4 வழி மேம்பாலம்
- வடசென்னையில் உட்கட்டமைப்பு மேம்படுத்த 1000்கோடி ஒதுக்கீடு
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 10,000 கோடி ஒதுக்கீடு
- சென்னை தீவுத்திடலை மேம்படுத்த 50 கோடி நிதி ஒதுக்கீடு
- சென்னை புறநகர் பகுதியில் 1424 கிலோ மீட்டர் மண் சாலைகள் 1211 கோடியில் மேம்படுத்தப்படும்
- வடபழனி, வியசார்பாடி, திருவான்மியூர் பணிமனைகள் முதல்கட்டமாக மேம்படுத்தப்படும்
- சைதாப்பேட்டை, தாம்பரம் இரண்டாம் கட்டமாக பணிமனைகள் மேம்படுத்தப்படும்
கோவையில் உலகத்தரம் வாய்ந்த செம்மொழி பூங்கா
முதற்கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா இதர வசதிகள் மேம்படுத்த 172 கோடியில் கட்டப்படும்
- பறவை பாதுகாப்பு ஆய்விற்காக மரக்காணத்தில் 25 கோடி மதிப்பில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைக்கப்படும்
- முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் 2000 கோடி ஒதுக்கீட்டில் 5145 கிலோ மீட்டர் சாலைகளை மேம்படுத்த திட்டம்
- தமிழ்நாட்டின் கிராம பகுதிகளில் உள்ள 10000 குளங்கள், ஊரணிகள் என்று 800 கோடி ரூபாய் புதுப்பிக்கப்படும்
மீன்வளத் துறையில் மீன்பிடி தடைக்காலத்தில் மீனவர்களுக்கு வழங்க 389 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாடு நெய்தல் திட்டம் என்று 2000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- விவசாய கடன்களுக்கு 2390 கோடி ஒதுக்கீடு
- நகை கடன் வழங்க 1000 கோடி ஒதுக்கீடு
- மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடிக்கு ₹600 கோடி ஒதுக்கீடு
- 341 ஏரி , 67 அணைக்கட்டு, 17 கால்வாய் புனரமைக்க ஒப்புதல்
உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தின் மூலம் 29 சதவீதம் வருகை அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்து 477 மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர்.
மகளிர் சுய உதவி குழுவிற்கு- 30000 கோடி ரூபாய் வரும் நிதி ஆண்டில் வழங்கப்பட நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது- அமைச்சர் பழனிவேல் ராஜன்
காலை உணவு திட்டத்தால் 1319 பள்ளிகளில் மாணவர்களின் வருகை அதிகரிப்பு
திருப்பத்தூர் பெரம்பலூர் அரியலூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காலை உணவு திட்டத்தால் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வருகை அதிகரிப்பு
- மாற்றுத்திறனுக்கான தனியான டேட்டா பேஸ் அமைப்பு உருவாக்கப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் 500கோடி ஒதுக்கீடு
- திருப்பத்தூர் பெரம்பலூர் அரியலூர் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் வருகை அதிகரிப்பு
- உயர்கல்வி துறைக்கு 6967 கோடி நிதி ஒதுக்கீடு
- காலை உணவு திட்டம் அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படும்
- மாற்று திறனாளி உரிமை திட்டத்திற்கு 39 சேவை மையம் துவங்கப்படும்
- கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகை 1500 இருந்த 2000 ஆக உயர்த்தி அறிவிப்பு
- மாற்று திறனாளி தொழில் முன்னேற றத்திற்கு கடன் உதவி
- அம்பத்தூரில் 150 கோடி மதிப்பில் திறன் மேம்பாட்டு மையம்
- நான் முதல்வன் திட்டத்திற்கு ₹50 கோடி ஒதுக்கீடு
- சென்னையில் அதி நவீன விளையாட்டு நகரம் அமைக்கப்படும்
- 25 கோடி மதிப்பில் நேரு விளையாட்டு அரங்கம் மேம்படுத்தப்படும்
- எண்ணும் எழுத்தும் திட்டம் 110்கோடி மதிப்பில் 4ம் வகுப்பு 5ம் வகுப்பு விரிவுப்படுத்தப்படும்
- ஆதி திராவிட பழங்குடியின பள்ளிகளில் பள்ளிகல்வி துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும்
- பாளையங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி 40 கோடி மதிப்பில் உயர்த்தப்படும்
- சர்வதேச உலகள அலவிளான விளையாட்டு மையம் சென்னையில் அமைக்கப்படும்
- ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை இணைய தளம் உருவாக்கப்படும்
- திருச்சி அதை சுற்றி உள்ள மாவட்டங்களில் மகாத்மா காந்தி மருத்துவமனையில் 110 கோடி மதிப்பில் சிறப்பு கட்டிடங்கள் கட்டப்படும்
- பள்ளிக்கல்வித்துறையில், 1500 கோடி செலவில் வரும் நிதியாண்டில் வகுப்பறைகள், கட்டடங்கள் கட்டப்படும்- அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டும் நடத்தப்படும்
- மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
- தஞ்சாவூரில் ராஜராஜ சோழனுக்கு அருங்காட்சியம் கட்டப்படும் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
- தமிழகத்தில் முக்கிய நகரங்களில் மெட்ரோ அமைக்கப்படும் -நிதி அமைச்சர்
- கிண்டி கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துமனை இந்த ஆண்டு துவங்கப்படும்
- இலங்கை தமிழர் மறுவாழ்வு 3510 குடியுருப்பு வீடுகள் 176 கோடி மதிப்பீட்டில் கடடப்ட்டும்
- சங்கம் பண்பாட்டு பெருவிழா முக்கிய நகர்புறங்களில் விரிவுப்படுத்தப்படும்
- தமிழ் கணிணி பண்பாட்டு மாநாடு தமிழில் நடத்தப்படும்
- தஞ்சையில் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும்
- மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும்
தமிழக பட்ஜெட் 2023: நிதியமைச்சர் உரையாற்றி வருகிறார்
- கொரானா பெருந்தொற்று காலத்தில் இருந்த நிதி நெருக்கடி குறைந்து உள்ளது
- தமிழ் மூதறிஞர்களுக்கு கட்டணமில்லா பேருந்து அட்டை வழங்கப்பட்டு வருகிறது
- அம்பேத்கார் படைப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்படும்
அதிமுக வெளிநடப்பு
ஈரோடு இடைத்தேர்தலில் முறைகேடாக திமுக கூட்டணி வெற்றி பெற்றதாக கூறி அதிமுக வெளிநடப்பு
3-வது ஆண்டாக காகிதமில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் வருகை தந்தார்.
#NewsUpdat | சட்டப்பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வருகை#TNBudget2023 | #TNBudget | #Budget2023 | #BudgetSession2023 | #TNBudget | #TNBudget2023 | #PTR | #ZeeTamilNews
Android Link: https://t.co/9DM6X6ZLY6
Apple Link: https://t.co/3ESH9sHwd3 pic.twitter.com/v2dSE3hzO5— Zee Tamil News (@ZeeTamilNews) March 20, 2023
ஈரோடு கிழக்கு எம்எல்ஏ ஈ வி கே எஸ் இளங்கோவனுக்கு 177 வது இருக்கை வழங்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் வரிசையில் இரண்டாவது ரோவில் சிந்தனை செல்வனுக்கு பின்புறம் இருக்கை வழங்கப்பட்டுள்ளது
தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகவிருக்கிறது.
மருத்துவமனைகளில் அடிப்படை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றுக்குத்தான் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக பட்ஜெட் 2023ல் வேளாண்மை, சுகாதாரத் துறைகளை டிஜிட்டல்மயப்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறலாம்.
நாட்டிலேயே அதிகத் தொழிற்சாலைகள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. தமிழக பட்ஜெட் 2023ல் தொழில் துறை மேம்பாட்டுக்கான முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
கடந்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 4.69%இலிருந்து 3.80% ஆகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த அம்சங்களை அலசி ஆராய்ந்து, வரி வருவாயைப் பெருக்கும் வகையிலான திட்டங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023-24ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.