சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. 36,000-ஐ தாண்டிச் சென்ற ஒரு நாள் தொற்று எண்ணிக்கை இப்போது 12,000-க்கும் குறைவாக வீழ்ச்சி அடைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கபட்டு வருகின்றன. அலுவலகங்களுக்கும் பிற தொழில்களுக்கும் மக்கள் செல்லத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், பொது போக்குவரத்து வசதிகளும் மக்களுக்கு தேவைப்படுகின்றது.


இதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin), போக்குவரத்துத் துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தினார்.  இதில் பேருந்து வசதிகளை மீண்டும் படிப்படியாக தொடங்குவது குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள 27 மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகளை இயக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பேருந்துகளை இயக்க போக்குவரத்துக் கழகங்கள் தயாராகி வருகின்றன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ALSO READ: ADMK EX Minister மணிகண்டன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட்


இது குறித்து கருத்து தெரிவித்த அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், கொரோனா பரவலை  தடுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசிய பணியாளர்களுக்கு தேவையான அளவில் பேருந்துகளை இயக்கி வருவதாகவும், பேருந்துகளுக்கு தெவையான பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர். பேருந்துகளை மக்கள் தேவைக்கு ஏற்ப இயக்க போக்குவரத்து கழகம் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


பேருந்துகளை இயக்குவது குறித்த அறிவிப்பை தமிழக அரசு (Tamil Nadu Government) வெளியிட்டவுடன், கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை வழிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகள் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூன் 21 ஆம் தேதிக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், எனினும், அரசாங்கத்தின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


முன்னதாக, மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் அத்தியாவசியமாக இருக்கும் அரசு பேருந்துகளை இயக்குவது குறித்து இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் துறையின் பிற அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் .


கொரோனா தொற்று (Coronavirus Pandemic) குறைந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில் கட்டம் கட்டமாக அரசு பேருந்து சேவைகள் துவாக்கப்படலாம் என தெரிகிறது. கொரோனா வழிமுறைகள் முழுமையாக பின்பற்றப்பட்டு, முதல் கட்டமாக 30 சதவிகித பயணிகளுடன் 50 சதவிகித பேருந்துகள் இயக்கப்படடக்கூடும் என கூறப்படுகின்றது.


எனினும், இன்னும் இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. இன்று இது குறித்து முதல்வர் ஆல்லோசனை நடத்தியுள்ளதால், எப்போது வேண்டுமானாலும் இது பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 


ALSO READ: Breaking News! CBCID Arrest: டெல்லியில் சிவசங்கர் பாபா கைது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR