ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி – தமிழக முதல்வர்!!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சென்னை: தமிழக முதல்வர் (Tamil Nadu) எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் தெற்கு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். COVID -19 க்கு எதிராக எடுக்கப்படும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.
எடப்பாடி பழனிசாமி (K Palanisamy), இந்த தொற்றுநோய் காலத்தில், ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக, அவசரகால பணிகளில் ஈடுபட்டிருக்கும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு 5,000 ரூபாய் நிதி உதவியை அறிவித்துள்ளார்.
முன்னதாக, அவர் 275 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் துவக்கி வைத்தார். 5,982 பயனாளிகளுக்கான வளர்ச்சிப் பணிகளுக்காக இதுவரை தமிழக அரசு 36 கோடி ரூபாய் செலவழித்துள்ளது.
ALSO READ: தமிழகத்தில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் நவம்பர் வரை இலவச அரிசி: முதல்வர்
தென்காசியில் தனது உரையில், 1500 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக புதிய தொழில்கள் விரைவில் உருவாக்கப்படும் என்று முதல்வர் கூறினார். சிறு தொழில்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு 82.27 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்கள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், 95 கோடி ரூபாய் மதிப்புள்ள கடன்களுக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், அணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
திருநெல்வேலியின் கங்கைகொண்டானில் உணவுப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் முதல்வர் உறுதியளித்தார்.
ALSO READ: ஆகஸ்ட் 10 முதல் மீண்டும் தமிழகத்தில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி: EPS