முதல்வர் எடப்பாடி பழனி‘சாமி’ விளம்பரத்தை ஒளிபரப்ப தடை!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடவுளாக சித்தரித்து வெளியான விளம்பரத்தை தியேட்டரில் ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடவுளாக சித்தரித்து வெளியான விளம்பரத்தை தியேட்டரில் ஒளிபரப்ப தமிழக அரசு தடை விதித்துள்ளது!
வழக்கமாக தியேட்டர்களின் மக்கள் செய்தி தொடர்பு ஒளிபரப்புத்துறை சார்பில் அரசு சார்ந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அரசு விளம்பரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் கடவுளாகச் சித்திரிக்கப்பட்டு ஒரு விளம்பரம் வெளியானது. இதைப்பார்த்து தியேட்டரில் உள்ள மக்கள் மத்தியில் சிரிப்பலை தான் எழுந்து வருகிறது.
'எந்த சாதனையையும் செய்யாத எடப்பாடி பழனிசாமி கடவுளுக்கு நிகரானவரா' என பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்ககளின் பசிக்கு இந்த விளம்பரம் செம்ம தீனியானது. இந்த விளம்பரத்தை வைத்து தொடர்ச்சியாக மீம்ஸ்கள் குவிந்தது. சமூக வலைத்தளங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்ட ஒரு விளம்பர டாப்பிக் என்ற பெயரையும் பெற்றது.
இந்நிலையில் பல்வேறு எதிர்ப்புகளை அடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்பான விளம்பரத்தை தியேட்டர்களில் இருந்து நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது தமிழக அரசு. இந்த விளம்பரத்தை விமர்சித்து மீம்ஸ்கள் வெளியானதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.