Audio விழிப்புணர்வு !! விழித்திரு... விலகி இரு... வீட்டிலேயே இரு... உங்களுடன் பேசும் தமிழக முதல்வர்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்து ஆடியோ விழிப்புணர்வு செய்தியை வெயிட்டுள்ளார். அதில் விழித்திரு.. விலகி இரு.. வீட்டிலேயே இரு.. என மக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
சென்னை: சீனாவில் தொடங்கி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் மெதுவாக பரவி வந்த COVID-19, தற்போது வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் சிலர் இன்னும் நோயின் வீரியத்தை அலட்சியம் செய்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 280-க்கும் மேற்பட்ட புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளது. அதுவும் தமிழகம் கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகி மாநிலங்களில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது வரை உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 8.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். அதபோல இந்தியாவில் நாவல் கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை 1,619 ஆக உயர்ந்துள்ளது. 49 பேர் உயிரிழந்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல விழிப்புணர்வு பிரச்சாரமும் நடத்தி வருகிறது.
அந்தவகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக மக்களிடம் கோரிக்கை வைத்து ஆடியோ விழிப்புணர்வு செய்தியை வெயிட்டுள்ளார். அதில் அவர், வணக்கம்.. உங்கள் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறேன். உலகம் எங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த அம்மா தலைமையிலான அரசு அனைத்து நடவடிக்கையும் போர்கால. அடிப்படையில் எடுத்து வருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் நலனும் முக்கியம். எனவே அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனவே இந்த நோயை கட்டுப்படுத்த விழித்திரு.. விலகி இரு.. வீட்டிலேயே இரு.. நன்றி.. வணக்கம்..!!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கொரோனாவால் அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 302 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் 11 பேர் உயிரிழந்துள்ளார். அடுத்தபடியாக, கேரளாவில் 241 பேர் பாதிக்கப்பட்டதில் 24 பேர் குணமடைந்து இருவர் உயிரிழந்துள்ளார். மூன்றாவதாக, தமிழகத்தில் 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் குணமடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு அதிகரித்ததால் மக்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.