கனமழைக்கு இடையே டெல்லி செல்லும் முதலமைச்சர் முக ஸ்டாலின்..!
CM Stalin to attend India alliance meeting in Delhi: தென் மாவட்டங்களில் கனமழை வரலாறு காணாமல் பெய்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்துக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ள முதலமைச்சர் முக.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி செல்கிறார். வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டில் வரலாறு காணாத கனமழை கொட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் முதலமைச்சரின் டெல்லி பயணம் இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும் அவருடைய பயணத்தில் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
தென் தமிழ்நாட்டில் கொட்டும் கனமழை
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இந்த மாவட்டங்களில் இருக்கும் ஏரி குளங்கள் எல்லாம் நிரம்பி குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் முதல் தளம் வரை தண்ணீர் தேங்கியிருக்கிறது. இதுவரை இப்படியொரு மழை வெள்ளத்தை பார்த்ததே இல்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
முற்றிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியிருக்கிறது. இந்த சூழலில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் வெள்ள நிவாரண பணிகளை முடுக்கிவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிவாரண முகாம்கள் அமைத்து மக்களுக்கான உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்க அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை டெல்லி புறப்படுகிறார். அவர் எதிர்கட்சிகள் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்தியா கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். விரைவில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேசிய அளவில் முன்னெடுக்க வேண்டிய விவகாரங்களை குறித்து திமுகவின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க உள்ளார். இந்த கூட்டத்தில் மாநில கட்சிகள் செல்வாக்கு செலுத்தும் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகளில் போட்டியிடுமாறு ஸ்டாலின் வலியுறுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
காங்கிரஸ் செல்வாக்கு
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு தென் மாநிலங்களில் கர்நாடகா, தெலங்கானவில் இருந்தாலும், வட மாநிலங்களில் எதிர்பார்த்தளவுக்கு இல்லை. அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியை தழுவி அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால், கட்சியை மீண்டும் தோல்வியடைந்த மாநிலங்களில் கட்டமைக்க நிர்வாகிகளை மாற்றியமைக்கும் காங்கிரஸ், எந்தெந்த மாநிலங்களில் தங்களுக்கு எவ்வளவு சீட் வேண்டும் என்பதை டெல்லியில் நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் சொல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... ஒரே நாளில் ஒரு ஆண்டுக்கான மழை - எங்கு அதிகம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ