திமுக கூட்டணி அமோக வெற்றி; தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம்: கே.எஸ்.அழகிரி
உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியால் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்ய வாய்ப்புள்ளது -கே.எஸ். அழகிரி.
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்படுகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை ஆரம்பத்தில் இருந்தே மாவட்ட ஊராட்சிகளிலும், ஒன்றிய ஊராட்சிகளும் திமுக முன்னிலையில் இருந்து வருகிறது.
9 மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் திமுக 138 இடங்களை கைப்பற்றியது. அதிமுக இரண்டு இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது.
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் 1,381 இடங்களுக்கான வாக்கு எண்ணிக்கை, தற்போது வரை 1368 பதவிகளுக்கான முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் திமுக கூட்டணி கட்சிகள் 1,007 இடங்களை வென்றுள்ளது. அதிமுக 214 இடங்களையும், பா.ம.க. 45 இடங்களையும், அ.ம.மு.க. 5 இடங்களையும், தே.மு.தி.க. 1 இடத்தையும் கைப்பற்றி இருக்கின்றன. சுயேட்சைகள் மற்றும் இதர கட்சிகள் 96 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.
ALSO READ | உள்ளாட்சி தேர்தல்: மிக மோசமான தோல்வியை நோக்கி அதிமுக
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி பெரும் வெற்றியை பெற்றுள்ளதை அடுத்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றியால் தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் அமையும். தொடர்ந்து வளர்ச்சி பாதையில் தடையின்றி பயணம் செய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த மக்களவை, சட்டமன்றத் தேர்தல்களில் வழங்கிய வெற்றியை விட அமோக ஆதரவுடன் உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். 74 ஊராட்சி ஒன்றியங்களில் 73-லும், 140 மாவட்ட ஊராட்சிகளில் 138-லும் மகத்தான வெற்றி தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு கிடைத்திருக்கிறது. அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தலிலும் பெரும்பான்மையான இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது.
கடந்த ஐந்து மாதங்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்றிதழை இத்தேர்தல் வெற்றி மூலம் மக்கள் வழங்கியிருக்கிறார்கள். தமிழக அரசு நிறைவேற்றுகிற திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாக பயனாளிகளுக்கு முழுமையாக சேருவதற்கு இந்த வெற்றி உறுதுணையாக இருக்கும்.
ALSO READ | விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்டவர்கள் வெற்றி
மக்கள் பங்கேற்கிற ஜனநாயக அமைப்பாக இருக்கிற ஊரக உள்ளாட்சி பொறுப்புகளில் தி.மு.க., தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. அதேநேரத்தில், மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத அளவிற்கு படுதோல்வியை மக்கள் வழங்கியிருக்கிறார்கள். அதேபோல, சந்தர்ப்பவாத கூட்டணியாக செயல்படுகிற பா.ஜ.க.வுக்கும், பா.ம.க.வுக்கும் மக்கள் பாடம் புகட்டியிருக்கிறார்கள்.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் வெற்றி மூலமாக தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் தடையின்றி பயணம் செய்வதற்கான வாய்ப்பு அருமையாக அமைந்திருக்கிறது. இதன்மூலம் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலத்தை அமைக்கிற பணியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து செயல்படுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
ALSO READ | TN Local Body Election வெற்றிப் பாதையில் திமுக...
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR