TN Local Body Election வெற்றிப் பாதையில் திமுக...

ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 986 இடங்களிலும், அதிமுக 199 இடங்களிலும், பிற கட்சிகள் 139 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 13, 2021, 11:15 AM IST
  • உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பாதையில் திமுக
  • சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக அபார வெற்றி
  • அதிமுக அணி பின்னடவை தொடர்ந்து சந்திக்கிறது
TN Local Body Election வெற்றிப் பாதையில் திமுக... title=

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முதல் எண்ணப்படுகின்றன. நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 74 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் இரண்டாவது நாளான இன்று, ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக 986 இடங்களிலும், அதிமுக 199 இடங்களிலும், பிற கட்சிகள் 139 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறது என்ற நம்பிக்கையுடன் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என முதலமைச்சர் ஸ்டாலின் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பாளையங்கோட்டை யூனியன் சிவந்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தலில் பெருமாத்தாள் என்ற 90 வயது நிரம்பிய மூதாட்டி போட்டியிட்டார். அவர், 1,558 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட செல்வராணி, உமா என்ற இரு வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

தனித்து போட்டியிட்ட தேமுதிக இதுவரை ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி ஒன்றிய கவுன்சிலராக தேமுதிக வேட்பாளர் சுமதி வெற்றி பெற்றுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் 21 வயது பெண் சாருலதா என்பவர் வெற்றி பெற்றார். இவர், ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மற்றொரு வேட்பாளரும் உள்ளார். திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியம் சிறுமருதூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில்  கடல்மணி, தன்னை எதிர்த்துப்ப் போட்டியிட்ட கன்னியம்மாள் என்பவரை விட ஒரே ஒரு வாக்கு அதிகமாக பெற்று 424 வாக்குகளுடன் வெற்றியை பதிவு செய்தார்.  

990 ஒன்றிய கவுன்சிலர் இடங்களை திமுக அணியும் 190 இடங்களை அதிமுக அணியும் பெற்றுள்ளன. மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக அணி 2 இடங்களையும் பெற்றுள்ளன.

Also Read | உள்ளாட்சி தேர்தல்: மிக மோசமான தோல்வியை நோக்கி அதிமுக

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக மாவட்ட வாரியாக திமுக அணி வென்ற இடங்கள்: மொத்தம் 990.
விழுப்புரம்- 215 
கள்ளக்குச்சி- 133 
வேலூர் - 85 
ராணிப்பேட்டை - 84 
செங்கல்பட்டு- 90 
திருநெல்வேலி-87 
தென்காசி- 112 
காஞ்சிபுரம் 78 
திருப்பத்தூர்- 81 

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்காக மாவட்ட வாரியாக அதிமுக அணி வென்ற இடங்கள்:
மொத்தம் 190 
காஞ்சிபுரம்- 11 
செங்கல்பட்டு- 26 
வேலூர்- 10 
ராணிப்பேட்டை-16 
திருப்பத்தூர்- 29 
விழுப்புரம்- 44 
கள்ளக்குறிச்சி-14 
தென்காசி- 11 
நெல்லை- 13

140 மாவட்ட கவுன்சிலர் தேர்தல் முடிவுகள் மாவட்ட வாரியாக: திமுக அணி 138 

விழுப்புரம்- 27 
கள்ளக்குச்சி- 19 
வேலூர் - 14 
ராணிப்பேட்டை - 13 
செங்கல்பட்டு-14 
திருநெல்வேலி- 12 
தென்காசி-14 
காஞ்சிபுரம் 11 
திருப்பத்தூர்- 13 
அதிமுக 2 
செங்கல்பட்டு- 1 
திருப்பத்தூர்-1

READ ALSO | குடும்ப உறுப்பினர்கள் 5 பேர் இருந்தும் ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News