முகத்தைப் பார்த்தோ, குரலைக் கேட்டோ ஒருவரது மனதில் இருப்பதை தெரிந்துகொள்ள முடியுமா? முடியும் என பலர் கூறலாம். ஆனால், சில நேரங்களில் முடியாது என்பதை அவ்வப்போது நடக்கும் சில சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுதந்திர தின விழாவின்போது, தனது உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, அந்த பெண் இன்ஸ்பெக்டர் என். மகேஸ்வரி (N Maheshwari) தனது வழக்கமான கம்பீரக் குரலில் கட்டளைகளை வழங்கி, அணிவகுப்பை கம்பீரமாக வழிநடத்தி, மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷுக்கு கார்ட் ஆஃப் ஹானரை வழங்கி கௌரவித்தார். ஆனால், அந்த குரலுக்குப் பின்னால் இருந்த வலியை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.


சனிக்கிழமை, திருநெல்வேலி மாவட்டத்தில் சுதந்திர தின அணிவகுப்புக்கு (Independence Day Parade) தலைமை தாங்கும் போது ஆயுத ரிசர்வ் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்.மஹேஸ்வரி அனைவரையும் போல முகக்கவசம் அணிந்திருந்தார். ஆனால் அந்த முகக்கவசம் அன்று அவருக்குத் தன்னை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பதை விட தனது உணர்ச்சிகளை மூடி மறைக்க அதிகம் தேவைப்பட்டது.


அணிவகுப்பு நடைபெற்ற வி.ஓ.சிதம்பரனார் ஸ்டேடியத்தில் கலந்து கொண்ட பலருக்கு, மகேஸ்வரியின் தந்தை நாராயணசாமி முந்தைய நாள் திண்டுக்கல் மாவட்டத்தில் காலமானார் என்பது தெரியாது.


தனது உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு, மகேஸ்வரி தனது வழக்கமான கம்பீரக் குரலால் தனது கட்டளைகளை வழங்கி, அணிவகுப்பை கம்பீரமாக வழிநடத்தினார்.


ALSO READ: 2020 TN Police Awards: தங்கப் பதக்கம் பெறும் தன்னலம் கருதா தமிழக காவல்துறை வீரர்கள்!!


தனது குழுவின் அணிவகுப்பு முடிந்த பின்னர்தான், கண்கள் குளமாகியிருந்த மஹேஸ்வரி, தனது தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள தனது தந்தையின் ஊருக்குப் புறப்பட்டார்.


அவரது கணவர் பாலமுருகனின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு அவர்களுக்கு மகேஸ்வரியின் தந்தை இறந்த செய்தி கிடைத்தது. கடைசி நிமிட மாற்றங்கள் செய்தால் அது தனது குழுவின் அணிவகுப்பில் குழப்பங்களை ஏற்படுத்தலாம் என கருதிய மகேஸ்வரி, தானே அடுத்த நாள் தனது குழுவை வழிநடத்த முடிவு செய்தார்.



மகேஸ்வரியின் உயர் நிலை கடமை உணர்ச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர். இவரைப் பாராட்டிய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (O Paneerselvam), "நெல்லை ஆயுதமேந்திய காவல் ஆய்வாளர் என் மகேஸ்வரி அவர்களின் தந்தையின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுதந்திர தினத்தையொட்டி அவரது தந்தையின் மறைவுக்கு வருந்தியபடி, மகேஸ்வரி தனது கடமையை நிறைவேற்றுவதற்காக அணிவகுப்புக்கு தலைமை தாங்கியதை பாராட்டுகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.


ALSO READ: கலக்கும் காக்கிச்சட்டை: COVID-லிருந்து குணமடைந்த 40 போலீசார் பிளாஸ்மா தானம் செய்தனர்!!