2020 TN Police Awards: தங்கப் பதக்கம் பெறும் தன்னலம் கருதா தமிழக காவல்துறை வீரர்கள்!!

அர்ப்பணிப்பு, கண்டிப்பு, திறமையான புலனாய்வு, கண்ணியம் என பல தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டது தமிழக காவல்துறை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 14, 2020, 06:13 PM IST
  • சமீப கலாங்களில் பொது மக்களுக்காக காவல்துறை ஆற்றிவரும் தன்னலம் கருதா தொண்டுகள் பலரால் பாராட்டப்பட்டு வருகின்றன.
  • 2020 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையினருக்கான பதக்கப் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விருதுகளைப் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.
2020 TN Police Awards: தங்கப் பதக்கம் பெறும் தன்னலம் கருதா தமிழக காவல்துறை வீரர்கள்!!  title=

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில காவல் துறைகளில் தமிழக காவல்துறைக்கு (Tamil Nadu Police) தனிச்சிறப்பு உண்டு. அர்ப்பணிப்பு, கண்டிப்பு, திறமையான புலனாய்வு, கண்ணியம் என பல தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டது தமிழக காவல்துறை.

சமீப கலாங்களில் பொது மக்களுக்காக காவல்துறை ஆற்றிவரும் தன்னலம் கருதா தொண்டுகள் பலரால் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க வகையில், இந்த கொரோனா (Corona) காலத்தில் முன்னணி வீர்ரகளாக, தங்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல் காவல் துறை வீரர்கள் பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் நலனில் அக்கறை செலுத்தி வருவதை நாம் தினமும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

2020 ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, காவல்துறையில் சீரிய பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு, அவர்கள் ஆற்றிய சிறந்த பொதுச் சேவைக்காக தமிழக அரசின் காவல் பதக்கங்களை வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் காவல் பதக்கம் (CM Police Awards) பெறும் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் பின் வருமாறு:

  • திரு.பி.ஜெகன்நாத், தலைமை காவலர் 19917, வேலை வாய்ப்பு மோசடி, மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்.
  • திரு ச.சரவணன், காவல் துணைஆணையர், சட்டம் மற்றும் ஒழுங்கு, திருநெல்வேலி மாநகரம்.
  • திரு. சௌ.டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப., கூடுதல் காவல்துறை இயக்குநர், தொழில் நுட்பப் பணிகள், சென்னை, 
  • முன்னாள் காவல் ஆணையர், மதுரை மாநகரம்.
  • திரு.கி.சங்கர், இ.கா.ப., காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
  • மருத்துவர் (திருமதி) ச.தீபா கணிகர், இ.கா.ப., காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம்.

இதேபோல், புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியவர்களை அங்கீகரிக்கும் வகையிலும் மற்றும் பணிகளில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தவர்களை பாராட்டும் வகையிலும், கீழ்க்கண்ட காவல் துறை அதிகாரிகளுக்கு 2020 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப்பணி பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது.

1. திருமதி ஜி.நாகஜோதி

  • காவல் துணை ஆணையர், மத்திய குற்றப்பிரிவு,
  • சென்னை பெருநகர காவல், சென்னை மாநகரம்.

2. திரு இரா.குமரேசன்,

  • காவல் துணை கண்காணிப்பாளர்,
  • “கியூ” பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.

3. திரு தி.சரவணன்,

  • காவல் உதவி ஆணையர்,வடக்கு சரகம்(குற்றம்), சேலம் மாநகரம்.

4. திரு எஸ்.கே.துரை பாண்டியன்,

  • காவல் துணை கண்காணிப்பாளர்,
  • காட்பாடி உட்கோட்டம்,வேலூர் மாவட்டம்.

5. திரு ஈ.இளங்கோவன் ஜென்னிங்ஸ்,

  • காவல் ஆய்வாளர்,ஓருங்கிணைந்த குற்றப்பிரிவு,
  • குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை,திருச்சி மாநகரம்.

6. திருமதி பி.எஸ்.சித்ரா,

  • காவல் ஆய்வாளர்,மாநகர குற்றப்பதிவேடுகள் கூடம் ,
  • திருச்சி மாநகரம்.

7. திருமதி கா. நீலாதேவி,

  • காவல் ஆய்வாளர், மாவட்ட குற்றப்பதிவேடுகள் கூடம்,
  • சிவகங்கை மாவட்டம்.

8. திருமதி ச.பச்சையம்மாள்,

  • காவல் ஆய்வாளர்,அரக்கோணம் இருப்புப்பாதை காவல் நிலையம்,
  • இருப்புப்பாதை காவல் சென்னை.

9. திருமதி ப.உலகராணி,

  • காவல் ஆய்வாளர்,குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை,
  • திருநெல்வேலி.

10. திருமதி பி.விஜயலட்சுமி,

  • காவல் ஆய்வாளர், அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு,
  • திருநெல்வேலி.

No description available.

No description available.

விருதுகளைப் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

இப்படிப்பட்ட விருதுகள் காவல்துறை வீரர்களின் பணிகளுக்கான மிகச்சிறந்த அங்கீகாரமாக இருப்பதோடு அவர்களுக்கு உயர்மட்ட உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கின்றன. மேலும், பொது மக்களுக்கு காவல்துறை வீரர்கள் செய்த பல முக்கிய பணிகள் மற்றும் சேவைகளைப் பற்றி தெரிந்து கொண்டு பாராட்ட ஒரு வாய்ப்பையும் இந்த விருதுகள் அளிக்கின்றன.

விருது பெற்ற காவலர்களுக்கும், தமிழக காவல்துறைக்கும் நமது பாராட்டுக்கள். காவல்துறை நம் நண்பன்… அன்றும், இன்றும், என்றும்!! 

ALSO READ: கலக்கும் காக்கிச்சட்டை: COVID-லிருந்து குணமடைந்த 40 போலீசார் பிளாஸ்மா தானம் செய்தனர்!!

Trending News