TN Corona Update: தமிழகத்தில் இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று
இன்று தமிழகத்தில் புதிதாக 14,016 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சென்னை: கொரோனாவின் இரண்டாம் அலையால் ஏற்பட்ட பாதிப்புகள் சற்றே குறையத் தொடங்கியுள்ளது. கடந்த மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று தற்போது தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று 14,016 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 23 லட்சத்து 53 ஆயிரத்து 721ஆக உயர்ந்துவிட்டது.
சிகிச்சையில் இருந்தவர்களில் இன்று 25,895 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 74 ஆயிரத்து 247ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் தற்போது 1,49,927 பேர் கோவிட் நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழந்தவர்களின் இன்றைய எண்ணிக்கை 267. இதனால் தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது.
Also Read | கொரோனா தொற்றால் மனதளவில் அதிக பாதிப்பு 'இந்த' வயதினருக்கு தான்: ஆய்வு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR