COVID-19 Update: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 30,016 பேர் பாதிப்பு, 486 பேர் உயிர் இழப்பு!!
சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 30,016 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 20,39,716 ஆக உள்ளது.
சென்னை: கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் தொற்றின் அளவு ஏழு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. எனினும் இதுவும் மிக அதிக அளவுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் 30,016 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 20,39,716 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டு 486 பேர் இறந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று அரசு மருத்துவமனைகளில் 305 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 181 பேரும் உயிரிழந்துள்ளனர். இன்றைய எண்ணிக்கையுடன் இதுவரை கொரோனா தொற்றால் மொத்தமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 23,261-ஐ எட்டியுள்ளது.
தமிழகத்தில் இன்று 31,759 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,10,157 ஆக உள்ளது.
இன்று மொத்தமாக 1,74,349 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 30,016 பேருக்கு தொற்று இன்று உறுதி செய்யப்பாட்டுள்ளது. இன்று தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 16,849 ஆண்களும் 13,167 பெண்களும் அடங்குவர்.
சென்னையில் (Chennai) மட்டும் இன்று ஒரே நாளில் 2,705 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மேலும் ரூ.41.40 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு
இது தவிர தவிர அரியலூரில் 256 பேரும், செங்கல்பட்டில் 1314, கோயம்பத்தூறில் 3692, கடலூரில் 590, தர்மபுரியில் 356, திண்டுக்கல்லில் 352, ஈரொட்டில் 1743, கள்ளக்குறிச்சியில் 347, காஞ்சிபுரத்தில் 711, கன்னியாகுமரியில் 927, கரூரில் 527, கிருஷ்ணகிரியில் 493, மதுரையில் 828, நாகப்பட்டினத்தில் 613, நாமக்கல்லில் 897, நீலகிரியில் 505, பெரம்பலூரில் 307, புதுக்கோட்டையில் 343, ராமநாதபுரத்தில் 308, ராணிப்பேட்டையில் 493, சேலத்தில் 1492, சிவகங்கையில் 198, தென்காசியில் 370, தஞ்சாவுரில் 797, தேனியில் 592, திருப்பத்தூரில் 434, திருவள்ளூரில் 1072, திருவண்ணாமலையில் 686, திருவாரூரில் 563, தூத்துக்குடியில் 691, திருநெல்வேலியில் 416, திருப்பூரில் 1697, திருச்சியில் 1099, வேலூரில் 423, விழுப்புரத்தில் 660, விருதுநகரில் 519 பேர் இன்று தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் தமிழகத்தில் தொடர்ந்து எழுச்சியைக் கண்டு வந்த தொற்றின் அளவு தற்போது எட்டு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. 36,000-ஐத் தாண்டி சென்ற ஒரு நாள் தொற்றின் அளவு படிப்படியாக இறங்கி இன்று 30,016 என்ற அளவில் உள்ளது.
தமிழகத்தில் (Tamil Nadu) மே 24 முதல் முதல் தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்தது. எனினும், மக்களுக்கு இதனால் எந்தவித பிரச்சனைகளும் ஏற்படாது என்றும் அத்தியாவசிய பொருட்கள் அவர்களுக்கு கிடைக்க அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றும் அரசு அறிக்கை விடுத்துள்ளது.
ALSO READ: Sputnik V: ஜூன் முதல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR