கடந்த 24 மணி நேரத்தில் 6,989 புதிய நோயாளிகள் கொரோனா தொற்றினால் (Corona Virus) பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் (Tamil Nadu) கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தை தாண்டிவிட்டது. இது மிகப்பெரிய ஒற்றை நாள் அதிகரிப்பு என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 24 மணி நேரத்தில் எண்பத்தொன்பது பேர் இறந்துவிட்டனர். 7,758 பேர் தொற்றிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். மாநிலத்தில் மொத்த எண்ணிக்கை இப்போது 2,06,737 ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் இறந்துவிட்டதாகவும், 1,329 பேரின் கொரோனா பரிசோதனை நேர்மறையாக வந்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. தமிழகத்தில் மீட்பு விகிதம் 73 சதவீதமும், இறப்பு விகிதம் 1.64 சதவீதமாகவும் உள்ளது.


பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் பதிவான COVID-19 நேர்மறை நோயாளிகளின் விவரம்:


திருவள்ளூர் - 385, கோயம்புத்தூர் - 270, ராணிபேட்டை - 244, மதுரை - 301, செங்கல்பட்டு - 449, விருதுநகர் - 376, காஞ்சீபுரம் - 442, வேலூர் – 212, தூத்துக்குடி - 317.


தொற்றை துவக்க நிலையிலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிப்பதற்காக மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஃபீவர் கிளினிக்குகளைத் திறக்கும் சென்னை மாதிரியை மாநில சுகாதாரத் துறை பிரதிபலிக்கிறது. இந்த வகை சென்னையின் தினசரி எண்ணிக்கையை 50 சதவீதம் குறைத்துள்ளது.


மகாராஷ்டிராவுக்குப் பிறகு இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா வைரஸ் நோயாளிகள் தமிழகத்தில் உள்ளனர். டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது.


ஜூலை 2 ஆம் தேதி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியது. அதன் பிறகு சுமார் மூன்று வாரங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாட்டின் தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியது. அப்போதிருந்து, சுமார் மூன்று லட்சம் புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.


தெலுங்கானாவில், ஒரு உயர் சுகாதார அதிகாரி சமுதாய பரவலைப் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார். "அடுத்த நான்கைந்து வாரங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், அறிகுறிகளை புறக்கணிக்கக்கூடாது" என்று தெலுங்கானாவின் பொது சுகாதார இயக்குனர் டாக்டர் ஜி. சீனிவாச ராவ் கூறினார். இருப்பினும் தெலுங்கானா சுகாதார அமைச்சர் எட்டலா ராஜேந்தர் அதை மறுத்துள்ளார்.


இதற்கிடையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கோவாக்சினின் (Covaxin) மனித மருத்துவ பரிசோதனை டெல்லியில் உள்ள AIIMS-ல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 30 வயது நபர் ஒருவருக்கு இந்த தடுப்பு மருந்தின் முதல் டோஸ் வழங்கப்பட்டது.


இரண்டாம் கட்டத்தில், 12 முதல் 65 வயதுக்குட்பட்ட சுமார் 750 பேர் கோதனைக்கான தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என AIIMS  இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.