TN Assembly Elections Result 2021: தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. கடுமையான கொரோனா வைரஸ் (COVID-19) கட்டுபாடுகளுக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மேலும் இறுதி முடிவுகள் மாலை 5 மணிக்குப் பிறகு வெளிவரத் தொடங்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டை பொறுத்த வரை 75 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் பணியில் மொத்தம் 35,836 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. 


தற்போது தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை பொறுத்த வரை 5,64,253 தபால் வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி, தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 


தமிழ்நாடு தேர்தல் முன்னணி நிலவரம்: 


திமுக கூட்டணி -38
அதிமுக கூட்டணி -31
அமமுக கூட்டணி -1


இந்நிலையில் தற்போதைய நிலையில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தபால் வாக்குகளில் திமுக கூட்டணி 29 இடங்களிலும், அதிமுக கூட்டணி 17 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.


கொளத்தூர், வேளச்சேரி, திருச்சி மேற்கு, செங்கல்பட்டு, சேப்பாக்கம், திருச்சுழி, காட்பாடி, பாளையங்கோட்டை, அண்ணாநகர், ஆண்டிப்பட்டி, கும்பகோணம், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், பவானிசாகர், கோபிச் செட்டிப்பாளையம், விருகம்பாக்கம், திருவண்ணாமலை, மதுரை மேற்கு, சைதாப்பேட்டை, திருச்செங்கோடு, அம்பத்தூர், திருவள்ளூர், திருத்தணி உள்பட தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணிக்கையில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது.


எடப்பாடி, ஆரணி, திருச்சி கிழக்கு, போடி, தொண்டாமுத்தூர், விழுப்புரம் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. 


* சென்னை சேப்பாக்கம் தொகுதியில் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தபால் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். 


* வேளச்சேரி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா அதிக வாக்குகள் பெற்று முன்னிலை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


* கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


* எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


* போடியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தபால் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார். 


* குமாரபாளையத்தில் அமைச்சர் தங்கமணி, விழுப்பரத்தில் சிவி சண்முகம் ஆகியோர் தபால் வாக்குகளில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR