தமிழகத்தில் கூடுதலாக 850 மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகையில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது.


நாமக்கல், திருவள்ளூர், ராமநாதபுரம், திருப்பூரில் தலா 100 இடங்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது. 


ஏற்கனவே 3450 மருத்துவ இடங்கள் (Medical Seats) தமிழகத்தில் உள்ள நிலையில், தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்ட இடங்களுடன் மொத்த மருத்துவ இடங்கள் 4300 ஆக உயர்ந்துள்ளன. 


இட வசதி, ஆய்வக வசதி, பேராசிரியர்கள் ஆகியவற்றைக் கொண்டு மாணவர்கள் எண்ணிக்கை முடிவு செய்யப்படுகிறது.


மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் (Ma Subramanian) சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், விருதுநகர், கள்ளக்குறிச்சி, உதகை ஆகிய மருத்துவ கல்லூரிகளில் தலா 150 மருத்துவ படிப்பு இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்று தெரிவித்தார். 


ALSO READ: சிகிச்சைக்கு ரேஷன் கார்ட் அவசியமில்லை: விதிமுறையை திரும்பப் பெற்றது ஜிப்மர்


மேலும், நாமக்கல், திருப்பூர், ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் உள்ள 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 100 மருத்துவ படிப்பு இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் கூறினார். 


அம்மா மினி கிளினிக் பற்றி கூறிய அவர், அம்மா மினி கிளினிக் என்பது பெயரளவில் தான் இருந்தது என்றும், எந்த இடத்திலும் அது மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கவில்லை என்றும் தெரிவித்தார். 


தமிழகத்திற்கு (Tamil Nadu) கூடுதலாக 850 கூடுதல் இடங்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைத்துள்ள அனுமதி மாணவர்களை பொறுத்தவரை ஒரு மகிழ்ச்சிகரமான விஷயமாகும். அதிக எண்ணிக்கையிலான மாணவர்களின் டாக்டர் கனவு நினைவாவதை இது உறுதி செய்யும் என்பதை மறுப்பதற்கில்லை. 


தமிழகத்தில் அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகளில், மொத்தம் 25 அலோபதி கல்லூரிகளும், ஒரு பல் மருத்துவ கல்லூரியும், 8 ஆயுஷ் (ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி) கல்லூரிகளும் உள்ளன. 


ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ இடங்களுக்கு விண்ணப்பிக்கும் மானவர்களின் எண்ணிகை அதிகமாகிவரும் நிலையில், கல்லூரிகளில் மருத்துவ இடங்களை அதிகரிப்பதும் அத்தியாவசியமாகிறது. 


ALSO READ: Reservation: இனி மருத்துவப் படிப்பிலும் EWS இடஒதுக்கீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR