சென்னை கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்!

கடந்த 21-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு 9-வது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கப்பட்டது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 26, 2021, 08:55 PM IST
  • கோவளம் (Covelong அல்லது Kovalam) என்பது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு மீனவ கிராமமாகும்.
  • கோவளத்தை ஒரு துறைமுக நகராக ஆர்காடு நவாப் சாதித் அலி வளர்த்தார்
  • சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் உலகின் தூய்மையான கடற்கரையாக கோவளம் கடற்கரை பராமரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை கோவளம் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ்!

சென்னை :  தமிழகத்தின் கடலோரப்பகுதி சுமார் 1,076 நீளம் கொண்டது. கடந்த 21-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் கடற்கரைக்கு 9-வது நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவளம் (Covelong அல்லது Kovalam) என்பது சென்னைக்கு அருகில் உள்ள ஒரு மீனவ கிராமமாகும். இது சென்னையில் இருந்து 40 கிலோமீட்டர் தெற்கில், கிழக்கு கடற்கரைச் சாலையில் மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ளது.  கோவளத்தை ஒரு துறைமுக நகராக ஆர்காடு நவாப் சாதித் அலி வளர்த்தார். இது 1746-ல் பிரஞ்ச்சுக்கார்களால் கைப்பற்றப்பட்டு, பின் 1752-ல் ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்டது.

kovalam

கோவளம் கடற்கரை கிராமம் மீன்பிடி தொழிலுக்குப் பிரபலமானது. இதனால் இது பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது, இது இந்தியாவின் முதல் நீர்சறுக்கு (surf ) கிராமமாகும். இங்கு நீர்சறுக்கு, படகுப்பயணம் போன்ற நீர் விளையாட்டுகள் நடக்கின்றன.  உலகளவில் பாதுகாப்பு மற்றும் தூய்மையான கடற்கரைகளை தேர்ந்தெடுத்து நீலக்கொடி சான்றிதழ்களை வழங்கும் டென்மார்க் சுற்றுசூழல் அமைப்பு நிறுவனம் கோவளம் கடற்கரைக்கு இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்நிலையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ மெய்யநாதன் உலகின் தூய்மையான கடற்கரையாக கோவளம் கடற்கரை பராமரிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் " பாதுகாப்பான நீச்சல் மண்டலம், உடைமாற்றும் பகுதி, சாய்ந்திருக்கும் மூங்கில் நாற்காலிகள், நிழற்குடைகள், குழந்தைகள் விளையாடும் பகுதி, மூங்கிலால் செய்யப்பட்ட குப்பைத்தொட்டிகள், 7 நிலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன.  பார்வையாளர்களின் பாதுகாப்புக்காக 4 கண்காணிப்பு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.முதலுதவி மையம், உடனடி மருத்துவ கவனிப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கடற்கரை ஒரு பூஜ்ஜிய திரவ கழிவு மேலாண்மை கடற்கரையாகும்.இதில் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம், சூரிய மின்நிலையம், தானியங்கி உரம் தயாரிக்கும் எந்திரம் கொண்ட திடக்கழிவு மேலாண்மை அலகு ஆகியவை உள்ளன." என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ பட்டதாரி பெண்ணின் உயிரை பறித்ததா பானிபூரி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News