TNGIM 2024: தமிழ்நாட்டில் பணத்தை கொட்டும் முகேஷ் அம்பானி... அடுத்த வாரமே வருகிறது டேட்டா சென்டர்!
Mukesh Ambani Speech: சென்னையில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
Tamil Nadu Global Investors Meet 2024: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு (TNGIM 2024) இன்றும், நாளையும் நடைபெற்று வருகிறது. மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா வரவேற்பு உரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டார். மேலும், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய உள்ள பல்வேறு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ரிலையன்ஸ் ஜியோவின் முதலீடுகள்
இந்நிகழ்வில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani) பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த பேச்சின் ஒரு பகுதியில் அவர் கூறியதாவது,"1300 சில்லறை விற்பனை அங்காடிகள் ரிலையன்ஸ் சார்பில் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனம் (Reliance Jio) தமிழ்நாட்டில் 35 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், இங்குள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் இருக்கும் 35 மில்லியன் சந்தாதாரர்களுக்கு டிஜிட்டல் புரட்சியின் மூலம் கிடைத்துள்ள பலன்களை வழங்குவோம்.
மேலும் படிக்க | உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு! எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?
உலகத்தரத்தில் டேட்டா சென்டர்...
மேலும், கடந்த டிசம்பர் மாதம் முதல் 5ஜி இணைய சேவையை உலகமெங்கும் கொண்டு சென்றுள்ளது. இதன்மூலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கும் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டில் பெற முடியும், இது அவர்களின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்யும். ரிலையன்ஸ் நிறுவனம் கனடாவின் Brookfield Assest Management மற்றும் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட Digital Reality ஆகியவற்றுடன் கைக்கோர்த்து உலகத்தரத்தில் டேட்டா சென்டரை தமிழ்நாட்டில் அடுத்த வாரம் திறக்க உள்ளது.
ரிலையன்ஸ் தமிழ்நாட்டில் புதிய முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது, குறிப்பாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பசுமை ஹைட்ரஜன் ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும். நிலையான வளர்ச்சியை ஊக்குவித்து காலநிலை மாற்றத்தால் நமது பூமியை காக்க தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றுவோம். எங்களது கொள்கைகள் மூலம் எடுக்க இருக்கும் முன்னெடுப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.
"தமிழ்நாடு அறிவுசார் பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற மாநிலம். 35 ஆயிரம் முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலை பயன்பாட்டிற்கு வர உள்ளது. மாநாட்டிற்கு நேரில் வர முடியாதது வருத்தமளிக்கிறது" எனவும் அவர் பேசினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ