சென்னை: கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண் மீன்வளம் மற்றும் கால்நடை உள்ளிட்ட கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதி ஆண்டு இளங்கலை படிப்புகளை டிசம்பர் 7 முதல் மீண்டும் திறப்பதாக தமிழக அரசு திங்கள்கிழமை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத் தொடர்ந்து, வெளி ஊர்களில் இருந்து மற்ற இடங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தங்கும் இடம் பற்றிய கேள்வி எழும்பியது. கல்லூரிகளில் விடுதிகளின் வசதி இல்லாமல் அவர்கள் தங்குவது எங்கே? இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களை தங்க அனுமதிக்க விடுதிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் (Tamil Nadu) லாக்டௌன் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி (K Palanisamy) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மருத்துவ மற்றும் அதனுடன் தொடர்புடைய சுகாதார அறிவியல் கல்லூரிகள் டிசம்பர் 7 முதல் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு மீண்டும் திறக்கப்படும். இருப்பினும், தற்போதைய கல்வி ஆண்டு அதாவது, 2020-21 ஆம் ஆண்டிற்கான பாடப் பிரிவுகளில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கான துவக்கம் பிப்ரவரி 1 முதல் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதிகள் மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படும்.


டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டௌனில் (Lockdown) மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ALSO READ: தமிழகத்தில் டிச., 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு; எதற்கெல்லாம் அனுமதி?


டிசம்பர் 14 முதல் கடற்கரைகளுக்கு பொது மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா இடங்களும் பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்படும்.


நிலையான இயக்க நடைமுறைகளைப் (SOP) பின்பற்றி வணிகத்திற்கான மற்றும் வணிக நோக்கங்களுக்கான கண்காட்சி அரங்குகளும் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.


சமூக, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மத நிகழ்வுகள் டிசம்பர் 1 முதல் 31 வரை அதிகபட்சமாக 50% அல்லது அதிகபட்சம் 200 நபர்களைக் கொண்டு அரங்கங்களில் நடத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் கிரேட்டர் சென்னை காவல்துறை ஆணையரிடமிருந்து அனுமதி வாங்கப்பட வேண்டும்.


"எதிர்வரும் நாட்களில் வைரஸ் பரவுவதைப் பொறுத்து, திறந்த வெளியில் கூட்டங்களை நடத்துவதற்கு தளர்வு வழங்க பொருத்தமான முடிவு எடுக்கப்படும்" என்று முதல்வர் கூறினார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில் பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கான சரியான வழிமுறைகளை அரசு வகுத்து வருகிறது.


புதுச்சேரி (Puducherry), ஆந்திரா மற்றும் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கு இப்போது இருப்பது போலவே மின் பதிவு தொடரும்.


ALSO READ: Tamilnadu government: கொரோனா தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR