தமிழகத்தில் இ-சிகரெட் தடை செய்யப்படுவதாக தமிழக அரசு கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து செப்டம்பர் மாதம் முதல் இது அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில், இன்று அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 
இ-சிகரெட் என்பது நிகோடின் ஆவியை வெளிப்படுத்தும் உபகரணம். நிகோடின் கேப்சூலை கொதிநிலைப்படுத்தும் போது அதில் இருந்து நிகோடின் ஆவி வெளியாகிறது, இந்த ஆவியை இழுக்கும் போது புகைப்பிடிப்பது போன்றே இருக்கும். நேரடியாக நிகோடின் ஆவி உபயோகிப்பதால் மனிதனுக்கு வெகு விரைவாக உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இதனாலே இதனை தடை விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், அதில், ஈ சிகரெட்டில் உள்ள மூலக்கூறுகள் புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனம் கொண்டிருப்பதாகவும், தீவிரமான நுரையீரல் பிரச்சனை, கர்ப்பிணிக்கும், சிசுவுக்கும் கேடு விளைவிக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.


பள்ளி,கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல், கல்வி, சுகாதாரத்துறைகளைச் சேர்ந்த 68 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு போதைப்பொருள் கட்டுப்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பீடி, சிகரெட்டுக்கு இணையாகவோ, அதைவிட அதிகமாகவோ அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தும் ஈ சிகரெட்கள் மற்றும் அதனைப் போன்ற சிகரெட்களின் உற்பத்தி, விற்பனை, விநியோகம், இறக்குமதி, பயன்பாடு, காட்சிப்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்குத் தமிழகத்தில் தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது