சென்னை: நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நீட் தேர்வு விவகாரத்தில் பிற மாநிலங்கள் இடையே ஒரு ஒருங்கிணைந்த நிலைபாட்டை உருவாக்கக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


இது தொடர்பாக, சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்பட உள்ளது. அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மீண்டும் ஆளுநரை சந்தித்து பேச  வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிகிறது. நீட் விலக்கு விவகாரத்தில், அதிமுகவும் முழு ஆதரவு கொடுத்துள்ளது.


அனைத்துக் கட்சிகளின் ஆலோசனையின் படியே மீண்டும் உள்துறை அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்கலாம் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும், அதையும் முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


ALSO READ | அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு


தமிழகத்தில் மருத்துவ கல்லூரிகள் திறப்பு தொடர்பான நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது இந்த நிகழ்ச்சி காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது என்றும் இதில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


இதனிடையே, 12 வருடங்களாக தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றி அமைக்க படாமல் இருந்ததால் நீட் தேர்வை எதிர்கொள்வதில் மாணவர்கள் சிரமப்படுவதாக பாஜகவின் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


நீட் தேர்வில் விலக்கு பெறுவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.


ALSO READ | நீட் தமிழகத்திற்கு அவசியம் - அண்ணாமலை


மருத்துவக் கல்லூரிகளில் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்த அனைத்து முனிவர்களுக்கும் 60 சதவீத நிதி உதவியை மத்திய அரசு செய்கிறது.


பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக உருவாக்கப்பட்டது அல்ல நீட் தேர்வு. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது தான் நீட் தேர்வு என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.


ALSO READ | நீட் தேர்வு நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR