பட்டாசு வெடிக்க நேரத்தை பிக்ஸ் செய்தது தமிழக அரசு!!
தீபாவளி அன்று தமிழகத்தில் காலை மற்றும் மாலை 2 வேளைகளில் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி அன்று தமிழகத்தில் காலை மற்றும் மாலை 2 வேளைகளில் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுற்றுசூழல் பிரச்னைகளை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிப்பதற்க்கு தடை செய்யவேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 23-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்க மற்றும் விற்பனைக்கு முழுமையாகத் தடை விதிக்க முடியாது. பட்டாசு தொழிலை நம்பி 8 லட்சத்திற்கும் அதிகமாக குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க முடியாது, எனவே இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கவோ, தயாரிக்கவோ தடை இல்லை. மாறாக பட்டாசு வெடிக்கும் நேரத்தை குறைக்கலாம் என கூறி நேர கட்டுப்பாடு விதித்தனர்.
இதன்படி., தீபாவளி அன்று இந்தியா முழுவதும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை என 2 மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் என உத்தரவிட்டது.
இதனையடுத்து பட்டாசு வெடிப்பதற்க்கான நேரத்தினை இரவு 8 - 10 லிருந்து, அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.30 மணி வரை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்ற பட்டாசு வெடிக்கும் நேரமாற்றம் குறித்து மாநில அரசுகள் முடிவு செய்துக்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது, அந்த வகையில் தீபாவளி அன்று தமிழகத்தில் காலை மற்றும் மாலை 2 வேளைகளில் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை வெடிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,
இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.