சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை...காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர்
மதுரை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுத்த விவகாரத்தில், அக்கல்லூரியின் முதல்வர் ரத்தினவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் 68-வது குழுவாக இணைந்த 250 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் உள்பட பலர் பங்கேற்றனர். அப்போது முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆங்கிலத்தில் ஏற்ற உறுதிமொழியில் சமஸ்கிருத வாக்கியங்கள் இருந்ததாக சர்ச்சை எழுந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக மதுரை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்னவேலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளில் புதியதாக சேரும் மாணவர்களுக்கும் மற்றும் மருத்துவக்கல்வி முடித்து மருத்துவ பயிற்சியில் சேரும் மாணவருக்கும் இப்போகிரேடிக் உறுதிமொழி ஏற்கும் வழக்கம் அனைத்து மருத்துவக்கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் தொடங்கிய காலத்திலிருந்து பின்பற்றி வரப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
அரசு மதுரை மருத்துவக்கல்லூரியில் நேற்று நடைபெற்ற புதிதாக சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியில் இப்போகிரேடிக் உறுதிமொழிக்கு பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டது. இது வன்மையாக கண்டிக்கத்தக்க செயலாகும். இதன் பொருட்டு மதுரை மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார்.
தன்னிச்சையாக விதிமுறையை மீறி இப்போகிரேடிக் உறுதிமொழிக்குப் பதிலாக மகரிஷி சரக் சப்த் எனும் உறுதிமொழியை மாணவர்களிடம் எடுக்க வைத்ததிற்கு துறை ரீதியாக விசாரணை நடத்த மருத்துவக்கல்வி இயக்குநர் நாரயணபாபுவுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அனைத்து மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கும் இனி வரும் காலங்களில் அனைத்துத்துறை தலைவர்களும், எப்பொழுதும் பின்பற்றப்படும் ஹிப்போகிரேடிக் உறுதிமொழியையே தவறாது கடைபிடிக்க மருத்துவக்கல்வி இயக்குநர் மூலம் சுற்றிக்கை வாயிலாக அறிவுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கி.மு.460-ம் ஆண்டில் இருந்து கி.மு.370-ம் ஆண்டு வரை வாழ்ந்த கிப்போகிரேட் மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எனவே மருத்துவத்தின் தந்தையான கிப்போகிரேட் பெயரில் உறுதிமொழி ஏற்பது மருத்துவம் படிப்போரின் வழக்கமாக இருந்து வருகிறது.
மேலும் படிக்க | சமஸ்கிருதம்தான் தேசிய மொழி - கங்கனா ரணாவத்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR