தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. இதில் வாராந்திர ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்து, 24 நாட்கள் விடுமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொது விடுமுறை நாட்களாகக் குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன் பின்வரும் நாட்களும் 2023ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாகக் கருதப்படும். அதன்படி ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், குடியரசு தினம், தைப் பூசம், தெலுங்கு வருடப் பிறப்பு, வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 


மேலும் படிக்க | நஞ்சில்லா உணவை வழங்கி நிறைவான வருவாய் ஈட்டும் இயற்கை விவசாயி!


ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் அதிகபட்சமாக 5 நாள்கள் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள தினங்களில் ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், தைப் பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட 8 நாட்கள், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | "இந்தி" நிலைநிறுத்த முற்பட்டால், தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் -சீமான் எச்சரிக்கை


இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸூக்கு டெல்லி கிரீன் சிக்னல்! இரட்டை இலை மீண்டும் முடக்கம்? எடப்பாடிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி


மேலும் படிக்க | சாதி சான்றிதழ் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் தீக்குளித்தவர் உயிரிழப்பு


மேலும் படிக்க | தம்பியை தொடர்ந்து அண்ணனும்.. தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ