நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் குறைந்த விலையில் உணவு பொருட்களை மத்திய, மாநில அரசுகள் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 35,083 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு மக்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய், சர்க்கரை போன்றவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்கள் புழக்கத்தில் உள்ளன. இந்த ரேஷன் கார்ட் மூலியமாக 7 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசுகிறார்கள்...' விஜய்யை மறைமுகமாக தாக்கிய சேகர்பாபு


ரேஷன் கடைகள் மூலம் அரசாங்கம் அரிசியை இலவசமாக வழங்குகிறது. மேலும் மலிவான விலையில் கோதுமை, சர்க்கரை, பீன்ஸ் மற்றும் பாமாயில் ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர். அன்றாடம் வேலை பார்த்து சம்பாதிப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது, ​​தமிழக அரசும் பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகை, வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு உதவி, அவசர கால நிவாரண உதவி என பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த சலுகைகளைப் பெற, ரேஷன் கார்டு கண்டிப்பாக தேவை. ரேஷன் அட்டை இருந்தால் மட்டுமே இந்த உதவியை பெற முடியும். மேலும், பெண்கள் மகளிர் உரிமை தொகையை பெறவும் ரேஷன் கார்ட் அவசியம் தேவைப்படுகிறது.


கடந்த ஆண்டு, பலர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து இருந்தனர். ஒரே சமயத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்ததால் அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், அந்த சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று கொண்டிருந்ததால், புதிய அட்டைகள் வழங்கும் பணியை நிறுத்த அரசு முடிவு செய்தது. தேர்தல் முடிந்ததும், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியை தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் மீண்டும் தொடங்கியது. அதிக விண்ணப்பங்கள் வந்ததால், ஒவ்வொன்றையும் கவனமாகப் பார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அதிகாரிகள் உறுதி செய்தனர்.


பின்னர் நேரடியாக வீடுகளுக்கு வந்து ஆய்வு செய்து சரிபார்த்தனர். ஒருசிலர் ஒரே வீட்டில் இருந்து கொண்டு 2 ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கின்றனர் என்று அரசு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. இதனால் வீடுகளுக்கு சென்று சரிபார்த்த பின்னர் தான் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. கூடுதல் ரேஷன் கார்டுகள் இருப்பதால் தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைக்க தாமதம் ஆகுவதாக அரசு தரப்பில் சொல்லப்படுகிறது.


புதிய ரேஷன் கார்டிற்காக 3 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்த நிலையில், சரியான தகவல்கள் இல்லாத 1,28,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக உணவுப் பொருள் வழங்கல்துறை தெரிவித்தனர். இருப்பினும், சரியான முறையில் விண்ணப்பித்து இருந்த 1,54,500 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் 6,640 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | திருமாவளவனுக்கு ஆதரவு! திமுகவிற்கு எதிர்ப்பு! விஜய்யின் அதிரடி பேச்சு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ