இனி தமிழில்தான் இனிஷியல்: பள்ளி கல்லூரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு
தமிழ் மொழியில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமலுக்கு வரும் என அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில், ஆவணங்களில் மாணவர்களின் பெயரை எழுதும்போது முன் எழுத்தையும் (இனிஷியல்) தமிழிலேயே எழுத வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு ஒரு அரசாணயை வெளியிட்டுள்ளது.
தமிழ் மொழியில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமலுக்கு வரும் என்றும் இதை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (MK Stalin) அவர்கள், தமிழகத்தில் முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவரும் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுத வேண்டும் என்றும் முன்னரே ஒரு அறிவிப்பை வெளியிட்டது நினைவிருக்கலாம்.
தமிழ் மொழியில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதுவது குறித்து சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து இது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழியின் (Tamil Language) வளர்ச்சிக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல வித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசானை, இதில் மற்றொரு பெரிய அம்சமாக பார்க்கப்படுகின்றது.
ALSO READ | ’பத்து அமாவாசைக்குள் அதிமுக அரியணை ஏறும்’ - பொள்ளாச்சி ஜெயராமன் ஆருடம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR